நளினி மனு-அரசுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்
சென்னை: தன்னை முன் கூட்டியே விடுவிப்பது குறித்து முடிவெடுக்க நீதிமன்ற உத்தரவுப்படி ஒராண்டுக்கு மேலாகியும் ஆலோசனை கமிட்டியை அரசு நியமிக்காததை எதிர்த்து நளினி தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றத்தில் அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று 18 ஆண்டுகளாக சிறையில் இருந்து வருகிறார் நளினி.
இதனால் தன்னை முன்கூட்டியே விடுதலை செய்யவேண்டும் என்று நளினி கோரிக்கை விடுத்தார். இந்தக் கோரிக்கையை ஆலோசனை கமிட்டி நிராகரித்தது.
இதை எதிர்த்து நளினி கடந்த ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். வழக்கை விசாரித்த நீதிபதி, ஆலோசனை கமிட்டி முறையாக அமைக்கப்படவில்லை என்றும், சட்டப்பூர்வமான ஆலோசனை கமிட்டியை நியமித்து நளினியின் கோரிக்கையை மீண்டும் பரிசீலிக்க வேண்டும் என்றும் தீர்ப்பளித்தார்.
ஆனால், நீதிமன்ற உத்தரவுப்படி ஒராண்டுக்கு மேலாகியும் சட்டப்பூர்வமான ஆலோசனை கமிட்டியை அரசு நியமிக்கவி்ல்லை என்றும், ஆகவே ஆலோசனை கமிட்டியை உடனே அமைக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் நளினி சென்னை உயர் நீதிமன்றத்தில் இப்போது மீண்டும் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார்.
மேலும் தன்னை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும் கோரியுள்ளார்.
இந்த மனு நீதிபதி பி.ஜோதிமணி முன் விசாரணைக்கு வந்தது. இதையடுத்து இதுபற்றி 2 வாரத்திற்குள் பதில் தரும்படி தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார். இந்த வழக்கு மீண்டும் அடுத்த மாதம் 6ம் தேதி விசாரணைக்கு வருகிறது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications