'காக்கா பிடித்து ராகுலை சந்தித்த விஜய்!'- எஸ்வி.சேகர்
கோவை: ராகுல் அழைப்பின்பேரில்தான் அவரைப் போய் பார்த்தேன் என்று விஜய் பேசியிருப்பது அப்பட்டமான பொய் என்று நடிகரும் எம்எல்ஏவுமான எஸ்.வி.சேகர் கூறியுள்ளார்.
கோவையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், தமிழ்நாட்டுக்கு ராகுல் காந்தி வந்ததெல்லாம் ஓகே. ஆனால் தமிழக முதல்வரை மரியாதை நிமித்தமாவது சந்தித்திருக்கலாம்.
விஜய்யின் அரசியல் புதிராக உள்ளது. பேட்டியில் விஜய் என்ன சொல்லியிருக்கிறார் என்பதே புரியவில்லை. யாருமே தன் மீது கோபப்பட்டு விடக்கூடாது என்பதற்காக, அவர் சமாளிப்பாக பேசியிருப்பது தெரிகிறது. ராகுல் அழைத்ததால்தான் போனேன் என்று அவர் கூறுவது நம்பும்படியாக இல்லை. அது ஒரு சுத்த பொய்.
பாருங்க... நான் அழகிரியை சந்தித்து பேசுகிறேன் என்றால் எனக்கு காரியம் ஆக வேண்டும் என்பதற்காகதான். அழகிரி என்னை கூப்பிட்டு பேச போவதில்லை. அவருக்கு அதற்கான அவசியமும் இல்லை.
அதைப்போலவே, விஜய் யார் யாரையோ காக்கா பிடித்து ராகுல் காந்தியை சந்தித்திருக்கிறார். விஜய்யை சந்திக்க ராகுலுக்கு என்ன அவசியம் வேண்டியிருக்கிறது. விஜய் மற்றும் சந்திரசேகரும் அவர்களுடைய சுயநலத்துக்காகவே ராகுலை சந்தித்துள்ளனர்.
விஜயகாந்த், 50 வயதுக்கு மேல் தான் அரசியல் கட்சி ஆரம்பித்தார்; அதற்கு முன், கடந்த 10 ஆண்டுகளாக அவர் அரசியலை விமர்சனம் செய்து கொண்டு இருந்தார். அவர் யாரையும் போய் பார்க்கவில்லை. அவரே நினைத்து, புதிய கட்சியை ஆரம்பித்தார்; கஷ்டப்பட்டாலும் கட்சியை நடத்துகிறார்.
விஜய் தன்னுடைய அரசியல் பிரவேசம் பற்றி இன்னும் தெளிவாகப் பேசவில்லை. இப்போது, அவர் கூறியிருக்கும் விஷயங்கள், நிச்சயமாக அவருடைய சினிமா வாழ்க்கையின் எதிர்காலத்தைப் பாதிக்கும் என்றார் சேகர்.
-
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
விஜய்யை பார்க்க வேண்டாம்.. ஸ்டாலினை கைவிட்டு இருக்க கூடாது.. ராகுலிடம் எகிறிய ப்ரியங்கா காந்தி! -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம்












Click it and Unblock the Notifications