'எகானமி கிளாஸ்' மாட்டு தொழுவமா-சசி தரூருக்கு காங். கண்டனம்
டெல்லி: 'மாட்டுத் தொழுவமான' எகானமி கிளாஸ் வகுப்பில் பயணம் செய்ய நான் தயங்கவில்லை என்று கூறியுள்ள மத்திய வெளியுறவுத்துறை இணையமைச்சர் சசி தரூரின் பேச்சுக்கு கடும் கண்டனம் கிளம்பியுள்ளது.
காங்கிரஸ் கட்சி, தரூரின் பேச்சு ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று, அறிவற்ற பேச்சு என்று வர்ணித்துள்ளது.
ட்வீட்டரில் நீங்கள் மத்திய அரசின் சிக்கன நடவடிக்கைக்கு ஆதரவாக விமானங்களில் எகானமி வகுப்புகளில் பயணம் செய்வீர்களா என்று கேட்கப்பட்டிருந்தது. இதற்கு சசி தரூர் அளித்த பதிலில், நமது புனித பசுக்களுக்கு ஆதரவு தெரிவித்து மாட்டுத் தொழுவ வகுப்பில் பயணம் செய்ய நான் தயங்கவே மாட்டேன் என்று கூறியிருந்தார் சசி தரூர்.
இது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக மத்தியில் சிக்கன நடவடிக்கையை அமைச்சர்கள் உள்ளிட்டோருக்கு அமல்படுத்தி வரும் மத்திய அரசை கொதிப்படைய வைத்துள்ளது.
இந்தியாவுக்குள் பயணம் செய்யும் மத்திய அமைச்சர்கள் எகானமி வகுப்புகளில்தான் பயணம் செய்ய வேண்டும் என நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி உத்தரவிட்டுள்ளார்.
அவரது உத்தரவை ஏற்று சோனியா காந்தி கூட தற்போது எகானமி வகுப்புகளில் பயணம் செய்ய ஆரம்பித்துள்ளார். அதற்கு ஒரு படி மேலே போன ராகுல் காந்தி ரயிலில் பயணித்தார்.
இந்த நிலையில்தான் இதையெல்லாம் நக்கலடிக்கும் வகையில் பேசியுள்ளார் தரூர்.
இதுகுறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெயந்தி நடராஜன் கூறுகையில், இந்தக் கருத்துக்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவிக்கிறது. சசி தரூருக்கு இது சாதாரண கருத்தாக இருக்கலாம். ஆனால் இதை காங்கிரஸ் கட்சி தீவிரமாக கருதுகிறது.
காரணம், ஆயிரக்கணக்கான இந்தியர்கள் எகானமி வகுப்பில்தான் விமான பயணத்தை மேற்கொள்கின்றனர். எனவே இதுபோன்ற பொறுப்பேற்ற, அறிவற்ற பேச்சை ஏற்க முடியாது.
இந்தப் பேச்சுக்காக சசி தரூரின் அமைச்சர் பதவி பறிக்கப்படுமா என்பதை நான் சொல்ல முடியாது. அது பிரதமரின் உரிமை. சசி தரூரின் கருத்து சரியல்ல, ஏற்க முடியாதது என்பது காங்கிரஸ் கட்சியின் கருத்தாகும்.
சசி தரூர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பது குறித்து கட்சித் தலைமைதான் தீர்மானிக்கும். சசி தரூரின் பேச்சை எகானமி வகுப்பிலோ அல்லது சாதாரண பஸ்சிலோ பயணம் செய்யும் எந்த ஒரு இந்தியரும் ஏற்க முடியாது என்றார் ஜெயந்தி நடராஜன்.
தினசரி ரூ. 1 லட்சம் வாடகை கொடுத்து ஸ்டார் ஹோட்டலில் தங்கியிருந்த சசி தரூரை, அமைச்சர் பிரணாப் முகர்ஜி கடுமையான உத்தரவின் மூலம் வெளியேற்றினார் என்பது நினைவிருக்கலாம். அது முதல் கடுப்பில் இருக்கிறாராம் சசி தரூர். இந்த நிலையில்தான் எகானமி வகுப்பை கிண்டலடித்துப் பேசியுள்ளார் சசி தரூர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications