மது.. பெண்கள் காவல் நிலையம் முற்றுகை
சிவகாசி: சிவகாசி அருகே உள்ள ஒரு கிராமத்தில் மது விற்பனையை தடுக்க கோரி பெண்கள் போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சிவகாசி தாலுகா, சில்லையநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் முத்தையா (45). இவர் டாஸ்மாக்கில் இருந்து மது பாட்டில்களை மொத்தமாக வாங்கி இருப்பு வைத்து பஸ் நிறுத்தம் பகுதியில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வருகிறார்.
இதே ஊரின் ரோட்டின் கிழக்கு பகுதியில் வச்சக்காரபட்டி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் முத்துமாரி என்பவர் பள்ளிக்கூடம் அருகே மது விற்பனை செய்கிறார்.
இந்த கிராமத்தில் போட்டி போட்டு மது விற்பனை நடைபெறுகின்றறது. இதனால், போதையில் பலர் மோதிக் கொண்டு அடிக்கடி பிரச்னை செய்கின்றனர்.
முத்தையா, நேற்று முன்தினம் இதே ஊரை சேர்ந்த நாராயணசாமியின் வீட்டில் புகுந்து அவரின் உடலில் பல இடங்களில் கீறி கொலை முயற்சியில் ஈடுபட்டார்.
இதனைக் தட்டிக்கேட்ட பெண்களை ஆபாசமாக திட்டி அரிவாளை காட்டி மிரட்டியுள்ளார்.
முத்தையா சிவகாசி கிழக்கு போலீசாருக்கு மாமூல் கொடுப்பதால் தான் இவரை போலீசார் கண்டு கொள்வது இல்லை என புகார் கூறிய பெண்கள் கிராமத்திற்குள் மது விற்பனையை தடை செய்ய வேண்டும் என்று கோரி சிவகாசி கிழக்கு போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டனர்.
முற்றுகையிட்ட பெண்களிடம் இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன், முத்தையாவைப் பிடித்து வைத்துள்ளோம். இனி கிராமத்தில் மது விற்பனை நடக்காது என உறுதி கூறியதை அடுத்து பெண்கள் கலைந்து சென்றனர்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications