இந்தோனேசியா, சைப்ரஸில் நிலநடுக்கம்

Subscribe to Oneindia Tamil

நிகோஷியா: இந்தோனேசியா மற்றும் சைப்ரஸில் நிலநடுக்கம் ஏற்பட்டது. கட்டிடங்கள் குலுங்கின. இதையடுத்து மக்கள் அலறியடித்து கொண்டு ஓட்டம் பிடித்தனர்.

சைப்ரஸ் தீவின் தெற்கு பகுதியில் இருக்கும் லிமசோல் நகருக்கு 7 கிமீ வடகிழக்கே நேற்று இரவு சுமார் 7.39 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இது ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவாகியிருந்தாலும். சுமார் 2 கிமீ., ஆழத்தில் மையமிட்டிருந்ததால் கட்டிடங்கள் வேகமாக குலுங்கின. இதையடுத்து அலுவலகத்தில் வேலை பார்த்து கொண்டிருந்தவர்கள் தங்களது பணிகளை போட்டுவிட்டு தெருவுக்கு ஒடி வந்துவிட்டனர்.

இது குறி்த்து அந்நகர வாசி ஒருவர் கூறுகையில், நிலநடுக்கம் பயங்கரமாக இருந்தது. சுமார் 20 நிமிடங்கள் கட்டிடங்கள் குலுங்கின. நாங்கள் பயந்துவிட்டோம் என்றார்.

சுமத்ரா தீவில் 5.4 ரிக்டர்...

இந்நிலையில் இன்று அதிகாலை சுமார் 5.16 மணிக்கு இந்தோனேசியாவின் சுமத்ரா தீவிலும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவு கோலில் 5.4 ஆக பதிவாகியது.

பென்கிளு மாகாணத்தில் உள்ள பின்டுகன் பகுதியில் இருந்து 94 கிமீ வடமேற்கில் சுமார் 25 கிமீ., ஆழத்தில் இது மையமிட்டிருந்தது.

இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+