ஓட்டுக்களுக்காக இந்துத்வாவை விட்டுத் தர முடியாது- ஆர்.எஸ்.எஸ்.
அகமதாபாத்: ஆர்.எஸ்.எஸ். அமைப்புடன் நெருக்கமான கட்சிகளுக்கு தேர்தலில் வாக்குகள் குறைந்தாலும் கூட, இந்துத்வா, இந்து போன்ற பதங்களைப் பயன்படுத்துவதை ஆர்.எஸ்.எஸ். கைவிடாது என்று கூறியுள்ளார் அதன் தலைவர் மோகன் பகவத்.
அகமதாபாத்தில் நடந்த இந்துத்வா குறித்த கருத்தரங்கின் நிறைவில் அவர் பேசுகையில், இன்று உலகில் இந்து மதம் அத்தியாவசியத் தேவையாகி விட்டது. இந்த வார்த்தைக்கு நிகரான வார்த்தை இன்று உலகில் வேறு எதுவும் இல்லை. அதை நாம் விட முடியாது. விஸ்வ இந்து பரிஷத் கைவிட முடியாது.
நாம் அனைவரும் எப்போதும் இந்துக்கள், இந்துத்வா போன்ற பதங்களை சொல்லியபடியேதான் இருப்போம். காரணம், அது உண்மையின் வெளிப்பாடாகும்.
ஒரு கூட்டத்தில் இந்து என்ற வார்த்தையைப் பயன்படுத்துவதால்தான் ஓட்டுக்கள் குறைவாக கிடைக்கின்றன. அதைக் கைவிட்டால் கூடுதல் வாக்குகளைக் கவர முடியுமே என்று சிலர் கேட்டனர். அதற்கு நான் எங்களுக்கு ஓட்டுக்கள் தேவையில்லை. அது தேவைப்படுவோரிடம் போய் இந்தக் கேள்வியைக் கேளுங்கள் என்றேன்.
அதற்கு அவர்கள், நீங்கள் மாற வேண்டும் என்றனர். மாற முடியாது என்று நான் பதிலளித்தேன்.
இந்து, இந்துத்வா என்ற சொல்லைப் பயன்படுத்துவதால்தான் நமக்கு செல்வாக்கு குறைகிறது என்றால் அப்படியே இருந்து விட்டுப் போகட்டும். இருந்தாலும், போனாலும், இந்துத்வாவோடே இருப்போம் என்றார் பகவத்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications