சென்னையில 2 பேர் மர்ம சாவு-தற்கொலையா... கள்ளச் சாராயமா?
சென்னை: சென்னை திருவொற்றியூர் போலீஸ் சோதனை சாவடி அருகே 2 பேர் மர்மமான முறையில் இறந்து கிடந்தனர். அவர்கள் கள்ளச்சாராயம் குடித்து இருந்தார்களா அல்லது தற்கொலை செய்து கொண்டார்களா என போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அவர்கள் இருவரும் திருவொற்றியூர் பட்டினத்தார்கோயில் குப்பத்தில் வசித்த ஆறுமுகம்(42) மற்றும் புதுவண்ணாரப்பேட்டை செரியன் நகரை சேர்ந்தவர் முன்னா(37) என தெரியவந்துள்ளது.
இருவரும் நல்ல நண்பர்களாம். இதில் ஆறுமுகம் மீனவர். முன்னா மீன் கடையில் வேலை பார்த்து வந்தவர். இவர்கள் கடைசியாக இருவரும் நேற்று இரவு திருவெற்றியூர் சந்தை பகுதியில் இருக்கும் டாஸ்மாக் கடையில் மது குடித்திருக்கிறார்கள்.
இந்நிலையி்ல அவர்கள் இருவரும் அருகிலிருக்கும் சோதனை சாவடிக்கு அருகே மர்மமான முறையில் பிணமாக கிடந்ததாக கூறப்படுகிறது. சம்பவ இடத்துக்கு விரைந்த போலீஸார் உடல்களை பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.
அவர்கள் இருவரும் கள்ளச்சாராய குடித்து இறந்தார்களா அல்லது விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்களா என போலீஸார் விசராணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதில் ஆறுமுகத்தின் மனைவி மேகலா கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்னதாக அவருடன் சண்டை போட்டு கோபித்து சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் அவர் தற்கொலை செய்து கொண்டிருந்தாலும், முன்னா ஏன் இறந்தார் என்ற கேள்வி எழுகிறது.
முன்னாவுக்கு மனைவியும் 2 வயதில் பாத்திமா என்ற குழந்தையும் உள்ளனர்.
இதையடுத்து போலீஸார் பல கோணத்திலும் விசாரணை நடத்தி வருகின்றனர். பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்தவுடன் இந்த பிரச்சனைகளுக்கு விடை கிடைக்கும் என தெரிகிறது.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications