தென்காசி எம்.எல்.ஏ. அலுவலகத்தை முற்றுகையிட்ட பெண்கள்
தென்காசி இலவச காஸ் அடுப்பு கேட்டு தென்காசி எம்எல்ஏ அலுவலகத்தை பெண்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தென்காசி நகராட்சி பகுதியில் வசிக்கும் பொது மக்களுக்கு இலவச கலர் டிவி, வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ரேசன் கார்டு உள்ள அனைவருக்கும் இலவச கலர் டிவி வழங்க வேண்டும், அது வரை யாருக்கும் இலவச கலர் டிவி வழங்ககூடாது என பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். அதனால் தென்காசி நகராட்சி பகுதியில் இலவச கலர் டிவி வழங்குவது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இலவச காஸ் அடுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. ஒவ்வொரு வார்டிலும் கவுன்சிலருக்கு வேண்டியவருக்கு மட்டும்தான் காஸ் அடுப்பு வழங்கப்பட்டதாக கூறப்பட்டது.
இதையடுத்து ரேசன் கார்டு உள்ள அனைவருக்கும் வழங்கபடவில்லை என்று கூறி 2வது வார்டு, 3வது வார்டு பகுதியை சேர்ந்த பெண்கள் நூற்றுக்கணக்கானோர் எம்எல்ஏ அலுவலகத்திற்கு வந்தனர். அவர்கள் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி எம்எல்ஏ அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
போராட்டத்துக்காக வரும் வழியில் தென்காசி நகராட்சி தலைவர் கோமதிநாயகம் வருவதைப் பார்த்த பெண்கள் ஆவேசத்துடன் அவரை முற்றுகையிட்டு தங்களுக்கு இலவச கலர் டிவி, காஸ் அடுப்பு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
-
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல்












Click it and Unblock the Notifications