இந்தியாவை அல்-கொய்தா தாக்கலாம்: இஸ்ரேல்
ஜெரூசலம்: பாகிஸ்தானில் இருந்து இயங்கி வரும் அல்-கொய்தாவுடன் தொடர்புடைய இயக்கம் ஒன்று மும்பை தாக்குதல் போல் இந்தியா முழுவதும் பல இடங்களில் தாக்குதல் நடத்தலாம் என இஸ்ரேல் எச்சரிக்கைவிடுத்துள்ளது.
கடந்த ஆண்டு நவம்பர் 26ம் தேதி மும்பையில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் வெளிநாட்டினரை தான் அவர்கள் அதிகம் குறிவைத்தனர்.
மும்பைத் தாக்குதலில் 6 இஸ்ரேலியர்கள் பலியானார்கள்.
இந்நிலையில் இஸ்ரேலின் தீவிரவாத தடுப்பு பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தீவிரவாத இயக்கங்கள் மும்பை தாக்குதல் போல் மீண்டும் ஒரு தாக்குதல் நடத்த திட்டமிட்டு வருகின்றனர். அவர்கள் இந்தியா முழுவதும் குறிப்பாக மேற்கு கடற்கரை மற்றும் இஸ்ரேலியர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் தாக்குதல் நடத்தக்கூடும்.
இதனால் இந்தியாவுக்கு சுற்றுலா சென்றுள்ள இஸ்ரேலியர்கள் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும். இந்த எச்சரிக்கையை சாதாரணமாக கருதிவிட வேண்டாம்.
அவர்கள் ஜன நெருக்கடி மிகுந்த பகுதிகளுக்கும், சுற்றுலா ஸ்தலங்களுக்கும் செல்ல வேண்டும். துப்பாக்கி ஏந்திய போலீஸாரின் பாதுகாப்பு இல்லாத பகுதி மற்றும் குறிப்பாக ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு போக வேண்டாம் என்றார்.
இந்தியாவில் பல இடங்களில் இருக்கும் வசிக்கும் யூதர்கள், இஸ்ரேலிய புத்தாண்டான ரோஷ் ஹஸ்னாவைக் கொண்டாட தயாராகி வருகின்றனர். இந்த நிலையில் இந்த எச்சரிக்கையை இஸ்ரேல் வெளியிட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications