மகாராஷ்டிர தேர்தலில் 'ராகுல் புகழ்' கலாவதி போட்டி
மும்பை: ராகுல் காந்தியால் லோக்சபாவில் பேசப்பட்ட விதவைப் பெண் கலாவதி, மகாராஷ்டிர சட்டசபைத் தேர்தலில் போட்டியிடுகிறார்.
கடந்த ஆண்டு லோக்சபாவில் நடந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் நம்பிக்கை வாக்கெடுப்பு விவாதத்தின்போது ராகுல் காந்தி கலாவதி என்ற பெண்ணின் பெயரைக் குறிப்பிட்டு அவரது வறுமை நிலையை விளக்கிப் பேசினார். இதன் மூலம் நாடு முழுவதும் பிரபலமானார் கலாவதி.
கலாவதி பந்துர்கர் என்ற பெயருடைய அந்த ஏழை விதவைப் பெண் தற்போது மகாராஷ்டிர மாநில சட்டசபைத் தேர்தலில் போட்டியிடவுள்ளார்.
விதர்பா ஜனாந்தோலன் சமிதி என்ற கட்சியின் சார்பில் கலாவதி போட்டியிடுகிறார்.
மகாராஷ்டிர மாநிலம் விதர்பா பகுதியைச் சேர்ந்தவர்தான் கலாவதி. அங்குள்ள ஏழை விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர். விதர்பா பகுதியில் ஏராளமான விவசாயிகள் வறுமை காரணமாக தற்கொலை செய்து கொண்டனர். வாங்கிய கடனைக் கட்ட முடியாமல் இவர்கள் உயிரை மாய்த்துக் கொண்டனர்.
கடந்த ஆண்டு கலாவதி வசித்து வரும் ஜல்கா கிராமத்திற்கு ராகுல் காந்தி வந்தபோது கலாவதியின் நிலை அறிந்து வேதனைப்பட்டார். இதைத்தான் தனது லோக்சபா பேச்சின்போதும் அவர் குறிப்பிட்டார்.
அவருக்குப் பல உதவிகளைச் செய்வதாகவும் வாக்களித்தார் ராகுல் காந்தி. ஆனால் இதுவரை ராகுல் கூறிய உறுதிமொழிகள் நிறைவேற்றப்படவில்லை என்பது வேறு விஷயம்.
இந்த நிலையில், 48 வயதாகும் கலாவதியை தேர்தலில் நிறுத்த விதர்பா ஜனாந்தோலன் கட்சி முடிவு செய்துள்ளதாக அதன் தலைவர் கிஷோர் திவாரி கூறியுள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications