புலிகள் என நினைத்து 9 குமரி மீனவர்கள் கேரளாவில் கைது
நாகர்கோவில் குமரி மாவட்ட மீனவர்கள் 9 பேரை விடுதலை புலிகள் என சந்தேகப்பட்டு கேரள போலீசார் சிறை பிடித்து வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
குமரி மாவட்டத்தை சேர்ந்த விசைப்படகு மீனவர்கள் கேரளா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் தங்கி மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். இவர்கள் கடலுக்குள் வாரக்கணக்கில் மீன்பிடிக்க செல்வார்கள்.
குமரி மாவட்டம் குளச்சல் அருகே உள்ள வாணியக்குடி பகுதியை சேர்ந்த ராபர்ட் கென்னடி, வாணியக்குடி வில்பிரட், மண்டைக்காடு புதூர் ராம்போ, கிங்ஸ்லி, அந்தோணி, சூசை, ஜான்சன், குளச்சல் ஸ்டான்லி, ராமநாதபுரம் மாவட்டம் வேர்காடு ஜான் கென்னடி ஆகிய 9 பேர் கேரளாவில் மீன்பிடி தொழில் செய்து வந்தனர்.
இவர்கள் கேரள கடல் பகுதியில் மீன் பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அவர்களது விசைப்படகில் பழுது ஏற்பட்டதால் விழிஞ்சம் பகுதியில் கரை ஓதுங்கினர். அவர்களது வருகை விழிஞ்சம் போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.
அவர்கள் விடுதலை புலிகளாக இருக்கலாம் என சந்தேகப்பட்டு போலீசார் 9 பேரையும் சிறை பிடித்ததாக கூறப்படுகிறது. அவர்களிடம் போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தினர்.
அப்போது மீனவர்கள் தங்களது சொந்த ஊர், பெயர் உள்ளிட்டவைகளை தெரிவித்தனர். அவர்கள் கூறிய தகவல் உண்மையா, என்று குமரி மாவட்ட போலீசாருடன் தொடர்பு கொண்டு விழிஞ்சம் போலீசார் விபரங்களை கேட்டனர். விழிஞ்சம் போலீசார் கூறிய தகவலின் அடிப்படையில் குளச்சல் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன் பேரில் கேரள போலீசாரின் பிடியில் உள்ள மீனவர்களின் சொந்த ஊர், பெயர் விவரங்களை குளச்சல் போலீசார் சேகரித்து வருகின்றனர். மீனவர்களின் அடையாள சான்றுகளை சேகரித்து விழிஞ்சம் போலீசாருக்கு கொடுத்து சிறை பிடிக்கப்பட்டுள்ள மீனவர்களை மீட்க குமரி மாவட்ட காவல்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications