தூத்துக்குடியில் பல லட்சம் ரூபாய் பவளப்பாறைகள் பறிமுதல்

தூத்துக்குடி துறைமுகத்திற்கு வெளிநாடுகளில் இருந்து கப்பலில் இருந்து சரக்கு கன்டெய்னர்கள் மூலம் பொருட்கள் வருவது வழக்கம்.
கன்டெய்னர்கள் மூலம் பொருட்களை சுங்கத்துறையினர் திடீர் சோதனை செய்தனர். அதில், இந்தோனேசியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஒரு கன்டெய்னரில், பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள அரிய கடல் வாழ் உயிரினமான பவளப்பாறை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து, அந்த கன்டெய்னர் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்த கன்டெய்னரில் உள்ள பொருட்கள் ராமநாதபுரத்தைச் சேர்ந்த பொன்னுசாமி என்பவருக்கு இறக்குமதி செய்யப்பட்டதாக ஆவணங்களில் குறிப்பிடப்பட்டிருந்தது.
அது குறித்து விசாரித்த அதிகாரிகள், அந்த முகவரி போலியானது என்பதை அறிந்து அதி்ர்ச்சி அடைந்தனர்.
அதிகாரிகள் விசாரணையில், ஐந்து நட்சத்திர ஓட்டல்களில் அலங்கார மீன் தொட்டிகளில் மீன்களுக்கு உணவாகவும், அலங்காரப் பொருளுக்காகவும் அவை இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக தெரிய வந்தது.
இந்தியாவில் பவளப்பாறைகள் ஏற்றுமதி, இறக்குமதி செய்ய, மத்திய அரசு தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications