சீன ஊடுறுவல் அதிகரிக்கவில்லை-ராணுவ தளபதி
சென்னை: இந்திய எல்லைக்குள் சீனாவின் அத்துமீறல் அதிகரித்துள்ளதாக கூறப்படுவது தவறு. அப்படி எதுவும் நடைபெறவில்லை என்று ராணுவ தலைமைத் தளபதி ஜெனரல் தீபக் கபூர் தெரிவித்துள்ளார்.
சென்னை வந்த தீபக் கபூர் இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசுகையில், கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு சீனாவின் அத்துமீறல்கள் அதிகரிக்கவில்லை. மேலும், இதில் கவலைப்படும்படியான சூழ்நிலையும் எதுவும் இல்லை. இதுதொடர்பாக பிரதமரே தெளிவுபடுத்தியுள்ளார்.
கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு சீனத் தரப்பிலிருந்து ஊடுறுவல்கள் அதிகரிக்கவில்லை என்று பிரதமர் கூறியுள்ளார். இந்த விஷயத்தை ஊடகங்கள் பெரிதுபடுத்தக் கூடாது.
பாகிஸ்தானின் சண்டை நிறுத்த மீறல்களுக்கு இந்திய ராணுவம் பொருத்தமான பதிலடியைக் கொடுத்து வருகிறது.
குளிர்காலத்திற்கு முன்பாகவே இந்தியாவுக்குள் பெருமளவில் ஊடுறுவி விட வேண்டும் என பாகி்ஸ்தான் தீவிரவாதிகள் முயன்று வருகின்றனர். இதற்கான முயற்சிகள்தான் தற்போது ஜம்மு, காஷ்மீரில் நடந்து வருகிறது. ஆனால் அதை முறியடிக்க படைகள் தயாராகவே உள்ளன என்றார் கபூர்.
-
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்!












Click it and Unblock the Notifications