மோசடி- பாதிரியாரைக் கண்டித்து விடிய விடிய போராட்டம்
நாசரேத்: நாசரேத்தில் பாதிரியாரை கண்டித்து முன்னாள் எம்பி ஜெயசீலன் தலைமையில் 100க்கும் மேற்பட்டோர் விடிய விடிய தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாசரேத் யோவான் பேராலயத்தில் லூர்துராஜ் தலைமை குருவாக உள்ளார். இவர் திருமண்டல தேர்தலில் திரவியபுரம் சபையை சேர்ந்த சேகர கமிட்டி உறுப்பினர்களை ஒருதலைபட்சமா அறிவித்துள்ளார்.
திருமண்டல தேர்தலில் தோல்வி அடைந்த உறுப்பினர்களுக்கு நியமனம் வழங்கியுள்ளார். கல்லறை தோட்ட நிலமோசடிகளை மறைத்துள்ளார் என்பது போன்ற பல்வேறு முறைகேடுகளில் ஈடுபடுவதாக புகார்கள் எழுந்துள்ளது.
இதைத் தொடர்ந்து அவரது செயலை கண்டித்து நேற்றிரவு 10 மணிக்கு முன்னாள் எம்பி ஜெயசீலன் தலைமையில் 100க்கும் மேற்பட்டோர் திரண்டனர். அவர்கள் அனைவரும் நாசரேத் யோவான் பேரலாய வாளகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது தொடர்பாக யார் தரப்பிலும் பேச்சுவார்த்தைக்கு வரவில்லை. இதனால் போராட்டம் தொடர்ந்து நடந்து வருகிறது.












Click it and Unblock the Notifications