பூட்டானில் நிலநடுக்கம்-3 இந்தியர் உட்பட 10 பேர் பலி
திம்பு: பூட்டானில் நேற்று ஏற்பட்ட திடீர் நிலநடுக்கத்தில் மூன்று இந்திய தொழிலாளர்கள் உட்ப்ட 10 பேர் பலியானார்கள்.
மதியம் சுமார் 2.53 மணிக்கு ஏற்பட்ட இந்த திடீர் நிலநடுக்கத்தால் ஆயிரக்கணக்கான வீடுகள் மற்றும் கட்டிடங்கள் குலுங்கின. இதையடுத்து மக்கள் அலறியடித்து கொண்டு வீடுகளை விட்டு வெளியேறினர்.
இந்த பூகம்பம் ரிக்டர் அளவு கோலில் 6.3 ஆக பதிவாகியிருந்தது.
தலைநகர் திம்புவுக்கு கிழக்கே உள்ள நரங் கியாக், மோங்கர், யாங்னீர் உள்ளிட்ட பகுதியில் கட்டிட இடிபாட்டுக்குள் சிக்கி 7 பேர் பலியானார்கள்.
சம்த்ரூப்ஜோங்கர் பகுதியில் மூன்று இந்திய தொழிலாளர்கள் பலியாகியுள்ளனர். இதையடுத்து மொத்தம் பலியானவர்களின் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது.
மீண்டும் ஒரு நிலநடுக்கம்...
இந்நிலையில் இன்று அதிகாலை சுமார் 1.08 மணிக்கு இந்தியாவின் வடகிழக்கு பகுதியில் மீண்டும் ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 5.7 ஆக பதிவான இந்த நிலநடுக்கம் மியான்மரில் மையமிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதை அசாம், அருணாச்சல பிரதேசம், நாகலாந்து, மணிப்பூர் மக்கள் உணர்ந்ததாக தெரிகிறது. முதல் நிலநடுக்கம் ஏற்பட்டு சில மணி நேரங்கள் கூட ஆகாத நிலையில் மீண்டும் ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டிருப்பது அப்பகுதியில் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து இயற்கை சீற்றம் மேலாண்மை பிரிவு அதிகாரி ஒருவர் கூறுகையில்,
இந்த நிலநடுக்கத்தில் ஏற்பட்ட சேதங்கள் குறித்து எதுவும் உடனடியாக அறியப்படவில்லை. ஆனால், மக்கள் பாதி தூக்கத்தில் அலறியடித்து கொண்டு வீட்டைவிட்டு வெளியேறினர். பயத்தில் அவர்களுக்கு தெருக்களிலே உறங்கினர் என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications