'மாட்டு தொழுவம்': சோனியாவிடம் தரூர் விளக்கம்
டெல்லி: எகானமி வகுப்பை மாட்டுத் தொழுவ வகுப்பு என்று பேசி சர்ச்சையில் சிக்கிய மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் சசி தரூர் இன்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்தித்து விளக்கம் அளித்தார்.
மாட்டுத் தொழுவ கருத்துக்காக தரூரின் பதவியைப் பறிக்க வேண்டும் என காங்கிரஸில் கருத்து எழுந்துள்ளது. சசி தரூரின் பேச்சால் வெகுண்ட ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், சோனியாவை சமீபத்தில் சந்தித்து தரூரை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என கோபமாக வலியுறுத்தினார்.
இந்த நிலையில், லைபீரியா சென்றிருந்த சசி தரூர், அங்கிருந்து ட்விட்டர் மூலம் மன்னிப்பு கேட்டது மேலும் சர்ச்சையை வலுப்படுத்தவே உதவியது.
இந்த நிலையில் இன்று காலை டெல்லி திரும்பிய தரூர் முதல் வேலையாக சோனியாவை சந்தித்துப் பேசினார். 20 நிமிடம் நீடித்த இந்த சந்திப்பின்போது மாட்டுத் தொழுவ கருத்து குறித்து அவர் விளக்கியதாக தெரிகிறது.
சந்திப்பை முடித்துக் கொண்டு வெளியில் வந்த அவர் குழுமியிருந்த செய்தியாளர்களைச் சந்திக்காமல் விருட்டென கிளம்பிச் சென்று விட்டார்.
சசி தரூர் பேசியது ஒரு ஜோக் என முன்பு பிரதமர் வர்ணித்திருந்தார். சோனியாவை சந்தித்தது போல பிரதமரையும் இன்று தரூர் சந்திப்பார் எனத் தெரிகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications