புலிகள் மறுவாழ்வு-இலங்கை திரட்டிய 23 மில்லியன்

Subscribe to Oneindia Tamil

LTTE
கொழும்பு: முன்னாள் விடுதலைப் புலிகள் வீரர்களுக்கு மறு வாழ்வு அளிக்கும் பணிக்கு வெளிநாட்டு நிதியுதவியைக் கோரியுள்ளது இலங்கை அரசு. இதுவரை 23 மில்லியன் டாலர் நிதியை அது திரட்டி விட்டதாம்.

இதுகுறித்து இலங்கை நீதித்துறை செய்தித் தொடர்பாளர் காமினி கோடகண்டா கூறுகையில், சர்வதேச இடம் பெயர்ந்தோருக்கான கழகம் மூலம் அமெரிக்கா, ஜப்பான், இங்கிலாந்து ஆகிய நாடுகள் நிதியுதவி செய்துள்ளன.

கிட்டத்தட்ட 3000 முன்னாள் விடுதலைப் புலிகள் தற்போது பிளம்பிங், கட்டுமான வேலை, தச்சு வேலை, எலக்ட்ரீஷியன் வேலை ஆகியவற்றில் பயிற்சி பெற்று வருகின்றனர்.

தற்போது 3 மையங்களில் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதை 20 மையங்களாக உயர்த்தும் திட்டம் உள்ளது என்றார்.

இதற்கிடையே, இடம் பெயர்ந்தோர் முகாம்களில் கிட்டத்தட்ட 15000 விடுதலைப் புலிகள் மறைந்திருப்பதாக இலங்கை அதிகாரிகள் கூறுகின்றனர். அவர்களைக் கண்டுபிடிக்கும் பணிகள் தொடர்ந்து நடந்து வருவதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.

கட்டுக்குள் உள்ளது ஸ்வைன்..இலங்கை:

இதற்கிடையே இலங்கை அரசு பன்றி காய்ச்சலை கட்டுக்குள் வைத்திருப்பதாக அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில்,

மற்ற நாடுகளை ஒப்பிடும் போது இலங்கையில் பன்றி காய்ச்சல் பாதிப்பு முழு கட்டுபாட்டில் இருக்கிறது.

மருத்து பரிசோதனைக்கு தேவையான உபகரணங்கள், மருந்துகளுக்கு ரூ. 10 ஆயிரம் செலவாகிறது. பரிசோதனையின் மொத்த செலவு ரூ. 15 ஆயிரம் வரை ஆகிறது.

மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தில் இதற்கான சோதனைகள் இலவசமாக அளிக்கப்படுகிறது. சில தனியாரும் பன்றி காய்ச்சல் சோதனை செய்து வருகின்றனர். அவனால் அவர்களால் இலங்கை அரசு நிறுவனத்துக்கு இணையான தரத்தில் செய்ய முடியவில்லை.

தற்போது இலங்கையில் இருக்கும் பன்றி காய்ச்சல் நோயாளிகளில் 90 சதவீதம் பேர் வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் தான். உள்நாட்டில் அது 10 சதவீதம் பேருக்கு தான் பரவியிருக்கிறது.

அவர்கள் அனைவரும் கண்டறியப்பட்டு 20 மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தற்போது வெளிநாட்டில் இருந்து இலங்கைக்கு வருபவர்களின் எண்ணிக்கையும் வெகுவாக குறைந்துவிட்டது. பண்டாராநாயகே சர்வதேச விமான நிலையம் மற்றும் கொழும்பு துறைமுகத்தில் பன்றி காய்ச்சல் சோதனைகள் தொடர்ந்து நடத்தப்படுகின்றன என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+