விவசாயிகளை விடாத கருப்பு-இல.கணேசன் பாய்ச்சல்
சென்னை: சிப்காட் தொழிற்பேட்டைக்கு நிலம் கையகப்படுத்துகிறேன் என்ற பெயரில் தமிழக அரசு பெருந்துறை பகுதி விவசாயிகளை தொடர்ந்து விடாது கருப்பு போல் விரட்டி வருகிறது என தமிழக பாஜக தலைவர் இல.கணேசன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் சிப்காட் தொழிற்பேட்டை இயங்கி வருகிறது. இந்த தொழிற்பேட்டை அமைக்க ஏற்கனவே கையகப்படுத்தப்பட்ட இடங்களை அரசு முழுமையாக பயன்படுத்தி வருகிறதா என்பதே ஆய்வுக்குரிய விஷயம்.
இங்கிருந்து வெளியேறும் கழிவுகளை சுத்திகரித்து, கடலுக்கு செலுத்துகின்ற திட்டம் தொடர்பாக இதுவரை மத்திய, மாநில அரசுகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
ஆனால், தற்போது சிப்காட் தொழிற்பேட்டையை விரிவாக்குவதாக கூறி கம்புளியம்பட்டி கிராமத்தில் விவசாய நிலங்களை அரசு கையகப்படுத்த முயற்சித்துள்ளது.
இதனால் இங்கு வசிக்கும் சுமார் ஆயிரம் விவசாய குடும்பங்கள் பாதிக்கப்படும் வாய்ப்பு உருவாகியுள்ளது. இவர்கள் அனைவரும் சிறு விவசாயிகள்.
இது தவிர இப்பகுதியில் சுமார் 47 விசைத்தறி கூடங்களில் 2,700 பேர் வேலை பார்த்து வருகின்றனர். இந்த நில கையகப்படுத்துதல் காரணமாக இவர்களும் பாதிக்கப்படுவார்கள்.
இதில் வேதனையான விஷயம் என்னவென்றால் தற்போது கம்புளியம்பட்டி கிராமத்தில் இருக்கும் இவர்கள் இதற்கு முன்னதாக தற்போது சிப்காட் இருக்கும் பகுதியில் குடியிருந்தவர்கள்.
அந்த நிலத்தை அரசு பறித்து கொண்டதை அடுத்து இவர்கள் இங்கு வந்து குடியேறி விவசாயம் செய்து வருகின்றனர். ஆனால் அரசு 'விடாது கருப்பு' போல தொடர்ந்து விரட்டி வருகிறது.
எனவே, இந்த கையகப்படுத்தும் திட்டம் உடனடியாக நிறுத்தப்பட்டு மறு ஆய்வு செய்யப்பட வேண்டும். தொழில் வளர்ச்சி தேவை. அது எந்த வகையிலும் அடுத்த துறையின் வளர்ச்சியை பாதிக்க கூடாது என அறிக்கையில் இல.கணேசன் கூறியுள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications