'கருணாநிதியும் திசைதிருப்பலும்'-நெடுமாறன்
சென்னை: தமிழர்களின் கோபத்துக்கும், வெறுப்புக்கும் ஆளாகும் ஒவ்வொரு முறையும் தனது உயிருக்கு ஆபத்து என கூக்குரல் எழுப்பி திசைதிருப்ப முயல்வது முதல்வர் கருணாநிதிக்கு கைவந்த கலையாகும் என நெடுமாறன் தெரிவித்துள்ளார்.
இது அவர் வெளியிட்ட அறிக்கையில்,
வன்னி வதை முகாம்களில் உள்ள 3 லட்சம் தமிழர்களைப் பற்றி கொஞ்சமும் கவலைப்படாமல் உயிருக்கு ஆபத்துஎன்று ஓலமிடும் முதல்வர் கருணாநிதியின் செயலால் உலகத் தமிழர்கள் வேதனை அடைந்துள்ளனர்.
அதனை சுட்டிக்காட்டியதற்காக என் மீது பாய்கிறார். குண்டர் சட்டத்தைக் காட்டி மிரட்டுகிறார்.
தமிழர்களின் கோபத்துக்கும், வெறுப்புக்கும் ஆளாகும் ஒவ்வொரு முறையும் தனது உயிருக்கு ஆபத்து என கூக்குரல் எழுப்பி திசைதிருப்ப முயல்வது முதல்வர் கருணாநிதிக்கு கைவந்த கலையாகும்.
ஐநா அதிகாரி லின் பாஸ்கோ அகதி முகாம்களை நேரில் பார்வையிட்டு உண்மைகளை அம்பலப்படுத்தியுள்ளார்.
ஆனால் முதல்வர் கருணாநிதி தில்லிக்கு கடிதம் எழுதுவதும், பிரதமர் சார்பில் அதிகாரிகள் இலங்கை அதிபருக்கு கடிதம் எழுதுவதுமான நாடகம் தொடர்கிறதே தவிர ஈழத் தமிழர்களுக்கு விடிவுகாலம் பிறக்கவில்லை.
இதுபோன்ற நாடகங்களை எல்லாம் நிறுத்திவிட்டு முகாம்களில் உள்ள தமிழர்களை மீட்பதற்கு உண்மையான நடவடிக்கைகளை அவர் மேற்கொள்ள வேண்டும்.
இலங்கை மீது பொருளாதார தடை...
தமிழர்களை உடனடியாக விடுதலை செய்யாவிட்டால், இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்ற தீர்மானத்தை ஐநாவில் இந்தியா கொண்டு வரவேண்டும். அப்போதுதான் இந்திய அரசின் மீது தமிழர்களுக்கு நம்பிக்கை பிறக்கும் என அறிக்கையில் நெடுமாறன் தெரிவித்துள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications