யுஎஸ் வாழ்க்கை முறை மாறினால் பூமி தப்பும்-இந்தியா

பூமி வெப்பமாதல் குறித்த ஐ.நா. மாநாடு இன்று தொடங்குகிறது. இதில் கலந்து கொள்வதற்காக இந்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஜெயராம் ரமேஷ் ஐ.நா. வந்துள்ளார். அங்கு நடந்த கூட்டம் ஒன்றில் ஜெயராம் ரமேஷ் பேசுகையில், பூமியைக் காப்பாற்ற 2020ம் ஆண்டை இலக்காகக் கொண்டு இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை சுயமாக எடுத்து நடத்தி வருகிறது.
அதேபோல அமெரிக்காவும் தனது வாழ்க்கை முறையில் மாற்றம் செய்ய முன்வர வேண்டும். அப்படி செய்தால் பூமியைக் காப்பாற்ற முடியும்.
இந்தியாவில் மரபு சாரா எரிபொருட்களை அதிகம் பயன்படுத்துவதை அரசு ஊக்குவிக்கத் தொடங்கியுள்ளது. குண்டு பல்புகளை படிப்படியாக ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விவசாயப் பணிகளின்போது அதிக அளவில் மீத்தேன் வாயு வெளிப்படாத வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இருப்பினும் ஒட்டுமொத்த பூமியையும் காப்பாற்ற அமெரிக்க மக்களின் வாழ்க்கை முறையில் பெருமளவில் மாற்றம் ஏற்பட வேண்டியது அவசியம் என்றார் ரமேஷ்.












Click it and Unblock the Notifications