ரஜினி, விஜயை நம்பி காங். இல்லை-இளங்கோவன்

சமீபத்தில் நடிகர் விஜய், ராகுல் காந்தியை டெல்லியில் சந்தித்தார். இதையடுத்து ராகுல் காந்தியின் தமிழக சுற்றுப்பயணத்தின் போது அவர் காங்கிரஸில் சேருவார் என கூறப்பட்டது.
இந்நிலையி்ல சென்னை வந்த ராகுல் காந்தி ரஜினிக்கும் காங்கிரஸில் சேர அழைப்பு விடுத்தார். ஆனால், ரஜினி இப்போதைக்கு அரசியலுக்கு வரும் ஆசையில்லை என கூறி நைசாக கழண்டுவிட்டார். அதேபோல் சில பல காரணங்களால் விஜய்யும் இப்போதைக்கு அரசியல் வேண்டாம் என ஒதுக்கி கொண்டார்.
மேலும், எதிர்பார்த்ததை போல் இளைஞர் காங்கிரஸிலும் யாரும் சேரவில்லை. இதையடுத்து ராகுல் காந்தி, தமிழக காங்கிரஸாருக்கு டோஸ் விட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இளங்கோவன் கூறுகையில்,
ராகுல் காந்தியின் தமிழக சுற்றுப் பயணத்தால் மற்ற கட்சியினர் அதிர்ச்சியடைந்துள்ளனர். அவரை பார்க்க பெரும் கூட்டம் கூடியது. இந்த சுற்றுப்பயணம் தமிழக இளைஞர்கள் யார் பக்கம் என்பதை உணர்த்திவிட்டது.
டெல்லியில் ராகுல் காந்தி, நடிகர் விஜயை சந்தித்து பேசியதாக சில செய்திகள் வந்துள்ளன. இது உண்மை இல்லை. விஜயை ராகுல் சந்திக்கவில்லை. விஜய் தான் தன்னை சந்திக்க நேரம் ஒதுக்கும் படி ராகுலிடம் கேட்டு கொண்டார்.
இந்த சந்திப்பு காங்கிரஸ் கட்சியினர் கொண்டாடவும் இல்லை, ஒதுக்கவும் இல்லை. ரஜினி ஆனாலும், விஜய் ஆனாலும் அவர்கள் முதலில் இந்திய குடிமக்கள். அதன் பிறகு தான் நடிகர்கள்.
எந்த நடிகர்களையும் நம்பி காங்கிரஸ் கட்சி இல்லை. கட்சியின் கொள்கையில் விருப்பமுள்ளவர்கள் யார் வேண்டுமானாலும் காங்கிரஸில் சேரலாம் என்றார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications