பணமோசடி-தூத்துக்குடி ஊராட்சி தலைவர் ஓட்டம்
Subscribe to Oneindia Tamil
தூத்துக்குடி: மக்கள் பணம் ரூ. 7 லட்சத்தை ஏப்பம்விட்ட ஊராட்சி தலைவர் தனது குட்டு அம்பலமானதும் தலைமறைவாகிவிட்டார். அவரை போலீஸார் தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ளது ஸ்ரீமூலக்கரை. இந்த ஊராட்சியின் தலைவராக பேச்சிமுத்து, துணை தலைவராக ஜஹவர்ஷா, எழுத்தாளராக நவநீதகிருஷ்ணன் ஆகியோர் உள்ளனர்.
இவர்கள் மூவரும் கடந்த ஆண்டு மே 2 முதல் இந்தாண்டு ஜூன் 9ம் தேதி வரை பல போலி ஆவணங்களை தயாரித்து. அதன்மூலம் குடிநீர் இணைப்பு, சாலை அமைக்கும் பணி போன்றவற்றில் ரூ.6 லட்சத்து 66ஆயிரத்து 355 மோசடி செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து அவர்கள் மூன்று பேர் மீது போலீஸில் புகார் கொடுக்கப்பட்டது. இந்த விஷயத்தை கேள்விபட்ட மூன்று பேரும் தலைமறைவாகிவிட்டனர். அவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications