ரூ. 2 லட்சம் நகை, பணத்துடன் இளம்பெண் கடத்தல்
நெல்லை: திருநெல்வேலி அருகே சங்கரன்கோவிலில் ரூ.2 லட்சம் மதிப்புள்ள பணம் மற்றும் நகையுடன் இளம்பெண் ஒருவர் கடத்தப்பட்டதாக போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவிலை அடுத்த கரிவலம்வந்தநல்லூர், பா.ரெட்டியார்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் நாராயணன். கூலி தொழிலாளி.
இவருக்கும், இவரது அக்கா ஜெயலட்சுமியின் மகள் மகேஸ்வரி என்பவருக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.
சமீபகாலமாக மகேஸ்வரிக்கும், பந்தபுளியை சேர்ந்த வக்கீல் மூர்த்தி என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 19ம் தேதி மூர்த்தி ஆசை வார்த்தை கூறி மகேஸ்வரியை கடத்தி சென்று விட்டாராம்.
வீட்டை விட்டு வெளியேறிய மகேஸ்வரி 20 பவுன் நகை மற்றும் ரூ. 65 ஆயிரம் பணம் ஆகியவற்றை எடுத்து சென்றுவிட்டார். இதன் மதிப்பு சுமார் ரூ.2 லட்சம்.
இதையடுத்து நாராயணன் தனது மனைவியை மூர்த்தி ரூ. 2 லட்சம் பணத்துடன் கடத்தி சென்றுவிட்டதாக கரிவலம்வந்தநல்லூர் போலீஸில் புகார் கொடுத்தார். இது குறித்து இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜூ விசாரணை நடத்தி வருகிறார்.












Click it and Unblock the Notifications