தங்கக்காசு மோசடி- தந்தை, மகன் உள்பட 3 பேர் கைது!
விழுப்புரம்: தங்கக்காசு என கூறி போலியான தங்கத்தை கொடுத்து ரூ. 26 லட்சம் மோசடி செய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும், 4 பேரை தேடி வருகின்றனர்.
திண்டுக்கல் திருவள்ளுவர் சாலை ஆர்ஆர் மருத்துவமனை எதிரில் மொபைல் போன் கடை நடத்தி வருபவர் அபீப் ரகுமான். இவரது வாடிக்கையாளர் சென்னை சீனு என்பவர் சமீபத்தில் புதுச்சேரியில் குறைந்த விலைக்கு தங்ககாசு கிடைப்பதாக கூறினார்.
இதை கேள்விப்பட்ட அபீப் ரகுமான், புதுச்சேரி எல்லையை ஒட்டிய அமணங்குப்பம் கிராமத்தை சேர்ந்த தர்மலிங்கம் என்பவரிடம்தங்க காசு வாங்கினார்.
பின்னர் கடந்த 9ம் தேதி மீண்டும் தங்க காசு வாங்குவதற்காக அவர் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த சிறுவள்ளிகுப்பம் கிராமத்துக்கு தனது நண்பர்கள் பாலமுருகன், வேல்முருகனுடன் சென்றார்.
அங்கு தர்மலிங்கத்திடம் ரூ. 26 லட்சம் கொடுத்து தங்க காசு வாங்கினார். அப்போது தர்மலிங்கம் போலியான காசுகளை கொடுத்து அவர்களை ஏமாற்றியுள்ளார். இந்த விவரத்தை சற்று தாமதமாக அறிந்து கொண்ட அபீப் ரகுமான் விக்கிரவாண்டி போலீஸில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் விசாரணை நடத்திய போலீஸார் அமணங்குப்பம் தர்மலிங்கம், அருணாசலம் அவரது மகன் சீத்தாராமன் உட்பட ஏழு பேர் கும்பலை தேடி வந்தனர்.
இந்நிலையில் அருணாசலம் (60), சீத்தாராமன் (22) மற்றும் மேல்சாத்தமங்கலம் ஆறுமுகம் (60) ஆகியோரை கைது செய்தனர்.
தலைமறைவாக இருக்கும் தர்மலிங்கம் உள்ளிட்ட நான்கு பேரை வலை வீசி தேடி வருகின்றனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications