'ராகுல் புகழ்' கலாவதிக்கு திடீர் சுகவீனம்- மருத்துவமனையில் அனுமதி
மும்பை: ராகுல் காந்தியால் நாடு முழுவதும் பேசப்பட்ட மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த ஏழை விதவைப் பெண்மணி கலாவதிக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனால் அவரால் தேர்தலில் போட்டியிட முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அக்டோபர் 13ம் தேதி நடைபெறவுள்ள மகாராஷ்டிர சட்டசபைத் தேர்தலில் விதர்பா ஜனாந்தோலன் கட்சி சார்பில் கலாவதி போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டிருந்தது. அத்தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளரை எதிர்த்து கலாவதி போட்டியிடுவார் எனவும் அந்தக் கட்சி அறிவித்திருந்தது.
இந்த நிலையில், தான் தேர்தலில் போட்டியிட மாட்டேன், எனக்கு அரசியல் தெரியாது என்று கலாவதி கூறியிருந்தார். இந்த நிலையில், திடீரென கலாவதிக்கு உடல் நலம் சரியில்லாமல் போய் அவரை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
இதுகுறித்து விதர்பா கட்சியின் தலைவர் கிஷோர் திவாரி கூறுகையில், நாங்கள் காத்திருக்க முடிவு செய்துள்ளோம். ஒருவேளை அவரால் போட்டியிட உடல் நலம் இடம் தராவிட்டால் வேறு வேட்பாளரை நிறுத்துவோம். இப்போதைக்கு கலாவதிதான் வேட்பாளர் என்றார்.
ஆனால் இன்றுதான் வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாளாகும். இந்த நிலையில் கலாவதி மருத்துவமனையில் போய்ச் சேர்ந்து விட்டதால் அவரால் மனு தாக்கல் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே அவர் போட்டியிடுவதற்கு வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது.
48 வயதாகும் கலாவதிக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதாகவும், அதனால் அவர் விதர்பாவில் உள்ள பந்தர்காவ்டா என்ற இடத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
-
முதல்வர் பதவிக்கு ‘குட்பை'.. ராஜினாமாவிற்கு பின் சோனியா - ராகுலுக்கு நன்றி கூறி கலங்கிய சித்தராமையா -
ஒட்டுமொத்த தென்னிந்திய அரசியலும் மாறிடுச்சு.. ஒரே மாதத்தில் ராகுல் எடுத்த 3 முடிவுகள்.. முக்கியம் -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு












Click it and Unblock the Notifications