13 லட்சம் இளைஞர்கள் இணைந்துள்ளனர்-காங்.
சென்னை: தமிழக இளைஞர் காங்கிரஸில் சுமார் 13 லட்சம் பேர் சேர்ந்துள்ளதாக அக்கட்சியின் தேர்தல் பொறுப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ராகுல் காந்தியின் சுற்றுப்பயணத்தை அடுத்து தமிழகத்தில் இளைஞர் காங்கிரஸ்க்கு உறுப்பினர் சேர்க்கை நடத்தப்பட்டது. விரைவி்ல் தேர்தல் நடக்கவிருக்கிறது. இளைஞர் காங்கிரஸ் பொது செயலாளர் உஷா நாயுடு, சுரஜ் ஆகியோர் தேர்தல் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இது குறித்து அவர்கள் இன்று சென்னை சத்தியமூர்த்தி பவனில் நிருபர்களிடம் கூறுகையில்,
இளைஞர் காங்கிரஸ்க்கு கடந்த ஆகஸ்டு 20ம் தேதியில் இருந்து உறுப்பினர் சேர்க்கையை தொடங்கினோம். நேற்று மாலை 7 மணியுடன் உறுப்பினர் சேர்க்கை முடிந்தது.
இதுவரை 13 லட்சம் பேர் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து தந்துள்ளனர். இந்த விண்ணப்பங்களை ஒரு மாதத்தில் பரிசீலனை செய்து விரைவில் தேர்தல் நடத்தப்படும். தேர்தலுக்கான தேதியை ஏற்கனவே முடிவு செய்துவிட்டோம். அதை பின்னர் வெளியிடுவோம்.
பஞ்சாயத்து, நகராட்சி, சட்டமன்ற தொகுதி வாரியாக படிப்படியாக தேர்தல்கள் நடத்தப்படும். எத்தனை லட்சம் இளைஞர்களை சேர்க்க வேண்டும் என்று எதுவும் நிர்ணயிக்கவில்லை என்றனர்.
-
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications