கேரள அணைக்கு அனுமதி: கருணாநிதி எச்சரிக்கையால் ஜெய்ராம் ரமேஷ் பல்டி

முல்லை பெரியாறு அருகே புதிய அணை கட்ட அனுமதிக்க வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்கை, கேரள முதல்வர் வி.எஸ்.அச்சுதானந்தன், நீர்ப்பாசனத்துறை அமைச்சர் என்.கே.பிரேமச்சந்திரன் மற்றும் கேரள எம்.பி.க்கள் ஆகியோர் நேரில் சந்தித்து கோரிக்கை வைத்தார்கள்.
கேரள அரசு புதிய அணை கட்ட திட்டமிட்டுள்ள பகுதி, பெரியார் புலிகள் வனச்சரணாலயப் பகுதியின் கீழ் வருவதால், அந்த இடத்தில் அணை கட்டுவதற்கும், ஆய்வு செய்வதற்கும், மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறையின் கீழ் உள்ள தேசிய வனஉயிரின வாரியம்தான் அனுமதி அளிக்க வேண்டும்.
கடந்த வாரம் இந்த வாரியத்தின் நிலைக்குழுக் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் புதிய அணை கட்டுவதற்கான ஆய்வுப் பணிகளை மேற்கொள்ள கேரள அரசு அனுமதி கேட்டிருந்தது உள்பட பல்வேறு மாநிலங்களில் உள்ள பிரச்சினைகள் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.
இந்த கூட்டத்தில், முல்லை பெரியாறு அருகே புதிய அணை கட்ட ஆய்வு செய்வதற்கு கேரள அரசுக்கு, அனுமதி அளிக்கப்பட்டதாக பத்திரிகைகளில் செய்தி வெளியானது. ஆனாலும், அதிகாரப்பூர்வமாக இது பற்றிய விவரம் வெளியிடப்படவில்லை.
இதைத் தொடர்ந்து, மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷுக்கு, முதல்வர் கருணாநிதி நேற்று ஒரு அவசர எச்சரிக்கைக் கடிதம் அனுப்பினார். தமிழக தலைமைச் செயலாளர் கே.எஸ். ஸ்ரீபதியும், மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை செயலாளருக்கு ஒரு கடிதம் அனுப்பினார்.
மேலும் மத்திய அமைச்சர் ராசா, ஜெய்ராம் ரமேஷை நேரில் சந்தித்து முதல்வர் கருணாநிதியின் எச்சரிக்கைக் கடிதத்தை நேரிலேயே வழங்கி, இந்த விவகாரத்தில் விளையாட வேண்டாம் என்று கூறியதாகத் தெரிகிறது.
மத்திய அரசின் இந்தச் செயலால் தமிழக மக்களிடையே கொதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அமைச்சர் ராசா தெரிவித்தார்.
இதையடுத்து கேரள அரசுக்கு புதிய அணை கட்ட ஆய்வு செய்ய அனுமதி அளிக்க மாட்டோம் என்று தமிழக அரசிடம் ஜெய்ராம் ரமேஷ் உறுதி அளித்து அதற்கான உத்தரவையும் பிறப்பித்தார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications