அதிமுக ஆண்டு விழா- அக்டோபரில் சென்னை திரும்புவார் ஜெ.

லோக்சபா தேர்தலில் அதிமுக கூட்டணி பெரும் தோல்வியைச் சந்தித்தது. எதிர்பாராத இந்த தோல்வியால் அதிர்ச்சி அடைந்த ஜெயலலிதா தனது தோழியோடு கடந்த மே 30ம் தேதி கொடநாடு எஸ்டேட்டுக்குப் போய் விட்டார். தொடர்ந்து அங்கேயே தங்கியுள்ளார்.
அங்கிருந்தபடி கட்சிப் பணிகளை அவர் மேற்கொண்டுள்ளார். கட்சியின் செயற்குழு, பொதுக்குழுக் கூட்டம், மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் ஆகியவற்றை நடத்தினார். எஸ்.வி.சேகர், அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோரை கட்சியை விட்டு நீக்கினார். தினசரி அறிக்கைகளை வெளியிட்டு வருகிறார். பல்வேறு போராட்டங்களையும் அறிவித்துக் கொண்டிருக்கிறார். இடையில் நடந்த ஐந்து தொகுதி சட்டசபை இடைத் தேர்தலையும் புறக்கணித்தார்.
ஜெயலலிதா கொடநாடு எஸ்டேட் போய் விட்டதை எதிர்க்கட்சியினர் விமர்சித்து கிண்டலடித்து வருகின்றனர்.
இந்த நிலையில், அக்டோபர் 17ம் தேதி அதிமுக ஆண்டு விழா வருகிறது. எனவே இதில் ஜெயலலிதா கலந்து கொள்வார் எனத் தெரிகிறது. எனவே இதற்கு வசதியாக அக்டோபர் முதல் வாரமே அவர் கொடநாட்டிலிருந்து சென்னை வந்து சேருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதிமுக ஆண்டு விழாவை சிறப்பாக கொண்டாடவும் ஜெயலலிதா திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இதன் மூலம் தொய்வடைந்து போய்க் கிடக்கும் அதிமுகவினருக்கு புத்துணர்ச்சியூட்ட முடியும் என அவர் நம்புகிறாராம்.
-
அதிமுகவில் தவெக ’துரந்தர்’.. மாமியார் மூலம் இலையை கருக வைத்த ’அர்ஜுனா’ வியூகம்! பலே பாலிடிக்ஸ் விஜய் -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன?












Click it and Unblock the Notifications