யுஎஸ்-60 மாடி கட்டிடத்தை தகர்க்க முயன்ற அல்-கொய்தா தீவிரவாதி கைது
டல்லாஸ்: அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் உள்ள 60 மாடி உயர கட்டிடத்தை தகர்க்க முயன்ற அல்-கொய்தா தீவிரவாதியை போலீசார் நேற்று கைது செய்தனர்.
ஜோர்டனை சேர்ந்த 19 வயதான அந்த தீவிரவாதியின் பெயர் ஹோசம் மஹர் ஹூசைன் ஸிமாடி. அவர் இன்டர்நெட்டில் தீவிரவாதிகளின் இணையத்தில் சாட் செய்து கொண்டிருந்த போது போலீஸார் அவனது திட்டம் குறித்து அறிந்து கொண்டதாக தெரிகிறது.
இந்த சம்பவம் எப்பிஐ அதிகாரி ஒருவர் கூறுகையில்,
ஸிமாடி அமெரிக்காவுக்குள் சட்டப்பூர்வ அனுமதி பெற்று வரவில்லை. கள்ளத்தனமாக நுழைந்துள்ளான். அவன் டெக்சாஸ் மாநிலம், டல்லாஸ் நகரில் உள்ள 60 மாடி பவுன்டைன் ஆபிஸ் டவர் கட்டிடத்தின் அடியில் ஒரு வாகனம் நிறைய குண்டுகளை நிரப்பி அதை தகர்க்க முயன்றுள்ளான்.
அவன் ஆன்-லைனில் ஒரு தீவிரவாத குழுவுடன் தொடர்பு வைத்திருந்த அவன் எப்பிஐ பார்வையில் பட்டான். அந்த குழுவில் இருந்தவர்கள் பலரும் தீவிரவாதத்தை ஆதரித்து கருத்துக்கள் கூறியிருந்தாலும், ஸிமாடி அளவுக்கு யாரும் வெறிபிடித்தவனை போல் கருத்து தெரிவிக்கவில்லை.
மேலும், அவன் பல இடங்களில் அமெரிக்காவை தாக்க வேண்டும் என கூறியுள்ளான்.
இதையடுத்து அமெரிக்க ரகசிய போலீஸ் அதிகாரி ஒருவர் அவனை தொடர்பு கொண்டு தான் அல்-கொய்தாவை சேர்ந்தவர் என அறிமுகப்படுத்தி கொண்டார். அவனுடன் பல மாதங்கள் பழகிய அந்த அதிகாரி, ஸிமாடியின் செயல்கள் அமெரிக்காவுக்கு பெரிய மிரட்டலாக மாறலாம் என்பதை அவர் உறுதி செய்து கொண்டார்.
ஸிமாடி தனது தீவிரவாத திட்டத்துக்கு பல இடங்களை தேர்வு செய்திருக்கிறான். அவன் வெல்ஸ் பார்கோ வங்கியிருக்கும் அந்த 60 மாடி கட்டிடத்தை தேர்வு செய்யும் முன் டல்லாஸ் போர்த் வொர்த் விமான நிலையத்தில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்தான்.
இந்த 60 மாடி கட்டிடத்தை தாக்கினால் பொருளாதார நெருக்கடியால் திணறும் அமெரிக்காவின் அஸ்திவாரம் ஆட்டம் கண்டுவிடும். இந்த நகரின் முக்கிய வங்கியும் அதில் இருப்பதால் அமெரிக்காவுக்கு பலத்த இழப்பு ஏற்படும் என அவன் அந்த அதிகாரியிடம் தெரிவித்துள்ளான்.
மேலும், இணையத்தில் அவன் தான் ஒசாமா பின் லேடனின் படை வீரன் என்றும், தீவிரமான ஜிகாத்தே நல்லது எனவும் அவன் எழுதியிருந்தான்.
அவன், மாறுவேடத்தில் இருந்த ரகசிய போலீஸ் அதிகாரியிடம் செப்டம்பர் 11ம் தேதி தாக்குதல் நடத்த இருந்ததாகவும், ஆனால் ரமலான் மாதம் என்பதால் அந்த திட்டத்தை செப்டம்பர் 20ம் தேதிக்கு மாற்றி வைப்பதாகவும் தெரிவி்த்துள்ளார்.
இதையடுத்து அந்த ரகசிய போலீஸ் அவரிடம் வெடிகுண்டு என போலியான வெடிபொருட்களை கொடுத்துள்ளார். மேலும், அந்த வெடிபொருட்களை வைத்துவிட்டு செல்போனை டையல் செய்தால் அது வெடிக்கும் என கூறியுள்ளார்.
இதை நம்பிய அவன் வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட அந்த வாகனத்தை கட்டிடத்தின் தரை தளத்தில் கொண்டு சென்று நிறுத்தினான். பின்னர் அவன் செல்போனை டையல் செய்தான். இதையடுத்து போலீஸார் அவனை கைது செய்தனர். அப்போது தான் அவன் போலீஸ் சூழ்ச்சியில் வசமாக மாட்டி கொண்டது தெரியவந்தது என்றார்.
அவன் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட இருக்கிறான். அவனுக்கு ஆயுள் தண்டனையும், 2 லட்சத்து 50 ஆயிரம் அமெரிக்க டாலர் அபராதமும் விதிக்கப்படும் என தெரிகிறது.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications