ஸ்வைன் எதிரொலி-புனேவில் எச்சில் துப்பினால் ரூ1000 அபராதம்
புனே: பன்றிக் காய்ச்சல் சற்றும் குறையாமல் தொடர்ந்து உயிர்ப் பலியை வாங்கி வருவதால் பொது இடங்களில் எச்சில் துப்ப புனே மாநகராட்சி நிர்வாகம் தடை விதித்துள்ளது. எச்சில் துப்பினால் ரூ. 1000 அபராதம் கட்ட வேண்டும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
நேற்று வரை பொது இடங்களில் எச்சில் துப்பினால் ரூ. 25 அபராதமாக வசூலிக்கப்பட்டு வந்தது. ஆனால் இன்று முதல் அது ரூ. 1000 ஆக அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது.
இதுதொடர்பான உத்தரவைப் பிறப்பித்துள்ள புனே மாநகராட்சி ஆணையர் மகேஷ் ஜாட்கே கூறுகையில், ஸ்வைன் ப்ளூ வைரஸ் பரவல் அதிகரித்துள்ளது. துப்பப்படும் எச்சிலில் எட்டு முதல் 9 மணி நேரம் வரை ஸ்வைன் ப்ளூ வைரஸ் உயிருடன் இருக்கும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
எனவேதான் பொது இடங்களில் எச்சில் துப்ப தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறித் துப்புவோரிடம் ரூ. 1000 அபராதமாக வசூலிக்கப்படும். இந்த உத்தரவை கடுமையாக நிறைவேற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.
எச்சில் துப்புவோரைக் கண்டுபிடித்து அபராதம் வசூலிக்க தனிப்படைகளும் அமைக்கப்பட்டுள்ளன என்றார்.
பன்றிக் காய்ச்சலுக்கு புனேவில் மட்டும் இதுவரை 61 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
பங்குச்சந்தை வீழ்ச்சி அடையப்போகிறது! தங்கம், வெள்ளி விலை பல மடங்கு உயரும்.. பிரபல எக்ஸ்பர்ட் -
அழகிரி தந்த கிரீன் சிக்னல்.. தவெகவில் இணைகிறார் அழகிரியின் மகள் கயல்விழி.. விஜய் சொன்ன ஒரு வார்த்தை -
ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. இலவசமாக புதுப்பிக்க ஒரு வருடம் கால அவகாசம் நீட்டிப்பு! -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
5 ஆண்டுக்கு ஒருமுறை சம்பள உயர்வு; ₹69,000 அடிப்படைச் சம்பளம்... மத்திய அரசு போடும் ஸ்வீட் பிளான்! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன?












Click it and Unblock the Notifications