சேவை செய்ய வாய்ப்பு..மக்களுக்கு நன்றி-பிரதமர்
பிட்ஸ்பர்க்: இன்று 77வது பிறந்த நாளைக் கொண்டாடும் பிரதமர் மன்மோகன் சிங், நாட்டுக்கு சேவையாற்ற தனக்கு வாய்ப்பளித்த மக்களுக்கு நன்றிக் கடன் பட்டுள்ளதாக உணர்ச்சிவசத்துடன் தெரிவித்துள்ளார்.
இந்தக் கடனை என்னால் எப்போதுமே திருப்பித் தர முடியாது என்றும் அவர் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.
பிட்ஸ்பர்க்கில் நடந்த 3வது ஜி-20 மாநாட்டின் நிறைவுக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மன்மோகன் சிங், இந்திய மக்களுக்கு நான் நன்றிக் கடன் பட்டுள்ளேன். அவர்களுக்காகப் பணியாற்ற என்னை அவர்கள் பணித்துள்ளனர். முதல் ஐந்து ஆண்டுகளை நான் அவர்களின் ஆதரவோடு நிறைவு செய்தேன்.
என் மீதான நம்பிக்கையைப் புதுப்பித்து மீண்டும் ஒரு சேவையைப் புரிய எனக்கு அவர்கள் அரிய வாய்ப்பை அளித்துள்ளனர். இது நிச்சயம் என்னால் அவர்களுக்குத் திருப்பித் தர முடியாத கடனாகும்.
இந்தக் கடனை ஓரளவாவது நான் அவர்களுக்குத் திருப்பித் தர வேண்டுமானால், எனது மீதமுள்ள வாழ்க்கையை அவர்களுக்காக அர்ப்பணித்து முழு மனதுடன் சேவை புரிவது மட்டுமே என்றார் மன்மோகன் சிங்.
1932ம் ஆண்டு செப்டம்பர் 26ம் தேதி பஞ்சாப் மாநிலம் கா என்ற ஊரில் பிறந்தவர் மன்மோகன் சிங். இந்த கிராமம் தற்போது பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலம் சக்வால் மாவட்டத்தில் உள்ளது.
சோனியா, கருணாநிதி வாழ்த்து
77வது பிறந்த நாளைக் கொண்டாடும் பிரதமருக்கு, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, தமிழக முதல்வர் கருணாநிதி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications