பிறந்த குழந்தையை கொன்ற தாய்-தாமிரபரணியில் வீசினார்
நெல்லை: திருநெல்வேலி தாமிரபரணி ஆற்றுக்கரையில் பிறந்த சில மணி நேரத்திலே குழந்தையை கொன்றுவிட்டு தப்பியோடிய தாயை போலீஸார் தேடி வருகின்றனர்.
திருநெல்வேலி கலெக்டர் அலுவலகம் அருகே தாமிரபரணி ஆற்றாங்கரையில் ஒரு குழந்தை பிணம் கிடப்பதாக கிராம நிர்வாக அதிகாரி நடராஜன் போலீசில் புகார் செய்தார்.
சம்பவ இடத்திற்கு பாளையங்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் குருநாதன், சப்-இன்ஸ்பெக்டர் சங்கர், லட்சுமி பிரபா, கோபால் மற்றும் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
அப்போது பிறந்து சில மணி நேரங்களே ஆன ஒரு ஆண் குழந்தை பிணமாக கிடந்தது. அதற்கு அருகிலேயே ஒரு குழந்தை பெற்ற தடையங்களும் காணப்பட்டது.
இதனால் இரவு அந்த இடத்தில் யாராவது ஒரு பெண்ணுக்கு பிரவசம் நடந்திருப்பது தெரிய வந்துள்ளது. மேலும், அந்த குழந்தையின் தாயே அதை கொன்றிருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.
தொப்புள் கொடி கூட அறுக்காத அந்த குழந்தையின் பிணத்தை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பினார்கள்.
கள்ளக்காதல் அல்லது திருமணத்துக்கு முன்பு ஏற்பட்ட தவறான உறவு காரணமாக அந்த குழந்தை பிறந்திருக்கலாம், தனது தவறை மறைக்க அந்த தாய் குழந்தையை கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications