நவீன ராவணன் ராஜபக்சே-டெல்லி உண்ணாவிரதத்தில் விஜயகாந்த் தாக்கு

Subscribe to Oneindia Tamil

Vijayakanth
டெல்லி: தசரா கொண்டாட்டத்தில் ராவணன் வதத்தை சோனியா காந்தியும், பிரதமர் மன்மோகன் சிங்கும் ரசித்துப் பார்த்தனர். ஆனால் நவீன கால ராவணனாக விளங்குகிறார் இலங்கை அதிபர் ராஜபக்சே என்று கடுமையாக சாடினார் தேமுதிக தலைவர் விஜயகாந்த்.

கச்சத்தீவை மீட்க வேண்டும், இலங்கைக் கடற்படையின் தாக்குதலிலிருந்து தமிழக மீனவர்களை மீட்க உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தேமுதிக சார்பில் விஜயகாந்த் தலைமையில் இன்று டெல்லியில் உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது.

விஜயகாந்த்துடன் அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகளும் உண்ணாவிரதத்தில் பங்கேற்றனர்.

காலையில் ஜந்தர்மந்தர் பகுதியில் உண்ணாவிரதம் தொடங்கியது. மாலை 5 மணி வரை போராட்டம் நடைபெற்றது.

விஜயகாந்த் தலைமையில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் பெரும் திரளான நிர்வாகிகளும், தொண்டர்களும் பங்கேற்றனர்.

விஜய்காந்தும் மேடையில் இருந்த தலைவர்களும் மீனவர்கள் அணியும் குல்லாயுடன் அமர்ந்திருந்தனர். மேடையைச் சுற்றி ஈழத் தமிழர்களின் துயரத்தை விளக்கும் படங்கள், மீனவர்கள் படும் பாட்டை விளக்கும் படங்கள் வைக்கப்பட்டிருந்தன.

மேலும் உண்ணாவிரதத்துக்கான காரணம் குறித்து இந்தியில் எழுதப்பட்ட ஏராளமான பேனர்களும் வைக்கப்பட்டிருந்தன.

தொண்டர்கள் கூட்டமும் யாரும் எதிர்பாராத வகையில் அதிகமாக காணப்பட்டதுதான் இன்றைய போராட்டத்தின் விசேஷம். மேலும், பெண்கள் கூட்டமும் தேமுதிக நிற சேலையுடன் உண்ணாவிரதத்தில் அமர்ந்திருந்தனர்.

விஜயகாந்த் பேசுகையில், தசரா விழாவை நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடியுள்ளனர். தீமையை அழிக்கும் விழாவாக தசரா கொண்டாடப்படுகிறது.

டெல்லியிலும் கூட பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் தசராவைக் கொண்டாடினர். ராவண வதத்தை ரசித்துப் பார்த்தனர். ஆனால் நவீன கால ராவணனாக ராஜபக்சே விளங்குகிறார்.

இலங்கை கடற்படையினர் தொடர்ந்து தமிழக மீனவர்களைத் தாக்கி வருகின்றனர். இலங்கை கடற்படையினர் மீது இந்தியா நடவடிக்கை எடுக்கப் போவது எப்போது. இந்திய கடற்படையும், கடலோரக் காவல் படையும், இந்தியர்களான தமிழக மீனவர்களுக்கு ஏன் பாதுகாப்பு கொடுப்பதில்லை என்று தெரியவில்லை என்றார் விஜயகாந்த்.

முன்னதாக தேமுதிகவினர் உண்ணாவிரதத்தில் கலந்து கொள்வதற்காக சென்னையிலிருந்து தனி ரயில் விடுமாறு ரயில்வேயிடம் கோரியிருந்தனர். முதலில் சம்மதித்த ரயில்வே துறை பின்னர் மறுத்து விட்டதாம்.

இருப்பினும், சென்னை, கோவை, திருவனந்தபுரம், பெங்களூர் என பல்வேறு நகரங்களிலிருந்து விமானங்கள் மூலம் தேமுதிகவினர் டெல்லியில் குவிந்து விட்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+