தேர்தலில் மகன் போட்டி-ஜனாதிபதி படத்தை நீக்க கோரிக்கை
அமராவதி: மகாராஷ்டிர மாநில சட்டமன்றத் தேர்தலில் ஜனாதிபதி பிரதிபா பாடீலின் மகன் தேர்தலில் போட்டியிடுவதால், அரசு அலுவலகங்களில் வைக்கப்பட்டிருக்கும் பிரதீபா பாட்டீலின் படத்தை நீக்க வேண்டும் அல்லது மூட வேண்டும் என அம்மாநில அமைச்சர் ஒருவர் போர் கொடி உயர்த்தியுள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் அடுத்த மாதம் 13ம் தேதி சட்டசபை தேர்தல் நடக்கிறது. அதில் ஜனாதிபதியின் மகன் ராஜேந்திர சிங் ஷெகாவாத் அமராவதி தொகுதியில் இருந்து போட்டியிடுகிறார்.
இதையடுத்து அத்தொகுதியின் தற்போதைய எம்எல்ஏவும், மாநில அமைச்சருமான சுனில் தேஷ்முக் என்பவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த அவர் போட்டி வேட்பாளராக களமிறங்க போவதாக தெரிவித்துள்ளார்.
மேலும், பிரதீபாவின் மகனை வீழ்த்த வேண்டும் என்பதில் மும்முரமாக செயல்பட்டு வருகிறார். அதில் முதல் வேளையாக அமராவதி தொகுதியில் இருக்கும் அரசு அலுவலகங்களில் இருக்கும் அவரது படத்தை நீக்க வேண்டும் என மாவட்ட கலெக்டருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
அதில் அவர்,
தேர்தல் நன்னடத்தை விதிகளின் படி ஒரு வேட்பாளர்களுக்கு ஆதரவான எந்த பொருட்களும் அரசு அலுவலகங்களில் வைக்கப்பட கூடாது. இதனால் வேட்பாளர் ராஜேந்திர சிங் ஷெகாவத்தின் தாயாரான ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் படத்தை நீக்க வேண்டும்.
பொது மக்கள் அதிகம் நடமாடும் இப்பகுதியில் இருக்கும் பிரதீபாவின் படங்களை பார்த்து மக்கள் அவரது மகனுக்கு ஓட்டு போட்டும் வாய்ப்புள்ளது என்றார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications