கட்சத்தீவு..ரயில் மறியல்-பெண் எம்எல்ஏ கைது
Subscribe to Oneindia Tamil
ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் தடையை மீறி ரயில் மறியல் செய்ய முயன்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பெண் எம்எல்ஏ பாலபாரதி உள்பட 182 பேர் கைது செய்யப்பட்டனர்.
கச்சத்தீவை மீட்டு தர வேண்டும் திண்டுக்கல் எம்.எல்.ஏ பாலபாரதி தலைமையில் நேற்று ரயில் மறியல் செய்யப் போவதாக மார்க்சிஸ்ட் அறிவித்திருந்தது.
இதையடுத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டனர். ஊர்வலத்தை போலீஸார் தேவர் சிலைக்கு அருகே தடுத்து நிறுத்தினர்.
ஊர்வலத்தில் வந்தவர்கள் வேறு வழியில் சென்று ரயில்வே நிலையத்துக்குள் நுழைய முயன்றனர். இதனால் உஷாரான போலீசார் ரயில் நிலையத்துக்கு செல்லும் அனைத்து பாதைகளிலும் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்தனர்.
மேலும், எம்எல்ஏ பாலபாரதி உட்பட 182 பேரை போலீஸார் கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications