சமாவோ தீவில் மீண்டும் நிலநடுக்கம்-சுனாமி இல்லை
லியோன்: சமாவோ தீவில் இன்று மீண்டும் ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 5.5 ஆக பதிவானது.
சமாவோ தீவில் நேற்று முன்தினம் ஏற்பட்ட பயங்கர பூகம்பம் காரணமாக சுனாமி ஏற்பட்டது. இதில் பல கிராமங்கள் முழுவதுமாக நீரில் மூழ்கின.
இதுவரை 111 பேர் மரணமடைந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 82 பேர் சமாவோ தீவில் பலியாயினர். 22 பேர் அருகே உள்ள அமெரிக்கன் சமாவோ தீவிலும், 7 பேர் டோங்கா தீவிலும் மரணமடைந்துள்ளனர்.
தொடர்ந்து அப்பகுதிகளில் மீட்பு பணிகள் நடைபெற்று வருவதால் பலி எண்ணிக்கை உயரலாம் என அஞ்சப்படுகிறது.
சுனாமியில் சிக்கி உயிர்பிழைத்த ஒருவர் கூறுகையில், எனது வீட்டை இழந்துவிட்டேன். காரை பறிகொடுத்துவிட்டேன். பணத்தை இழந்துவிட்டேன். எல்லாம் போய்விட்டது. இருந்தாலும் நான் உயிரோடு இருப்பதற்காக கடவுளுக்கு நன்றி சொல்கிறேன் என்றார்.
இந்நிலையில் நேற்று மாலை 6.13 மணிக்கு மீண்டும் ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஆனால் இது 5.5 ரிக்டர் அளவுக்கு ஏற்பட்டுள்ளது. சமாவோ தீவில் இருந்து 194 கிமீ தொலைவில், 10 கிமீ ஆழத்தில் பசிபிக் பெருங்கடலில் ஏற்பட்டுள்ளது.
இதனால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
-
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம்












Click it and Unblock the Notifications