டெல்லியில் இலங்கை தூதரகம் மீது தாக்குதல்
டெல்லி: டெல்லியில் உள்ள இலங்கை தூதரகம் மீது ஒரு கும்பல் கல்வீசி தாக்குதல் நடத்தியது. இதையடுத்து அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இன்று பிற்பகல் 3 மணியளவில் சுமார் 15 பேர் கொண்ட கும்பல் தூதரகத்தின் மீது கற்களை வீசித் தாக்கிவிட்டு தப்பியோடிவிட்டது. இதில் கட்டடத்தின் சில கண்ணாடி ஜன்னல்கள் சேதமடைந்தன.
இதையடுத்து கூடுதல் பாதுகாப்பு கோரி இலங்கைத் தூதரகம் டெல்லி போலீஸை நாடியுள்ளது. இதைத் தொடர்ந்து அங்கு ஏராளமான ஆயுதம் தாங்கிய போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
டெல்லியில் புதிய தமிழகம் பேரணி:
இந் நிலையில் ஈழத் தமிழர்கள் விவகாரத்தில் மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி புதிய தமிழகம் கட்சி சார்பில் இன்று டெல்லியில் பிரதமர் இல்லம் நோக்கி பேரணி நடத்தப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த பேரணியில் கலந்து கொள்ள நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து ஏராளமான புதிய தமிழகம் தொண்டர்கள் டெல்லி புறப்பட்டுச் சென்றுள்ளனர்.
இந்திய கம்யூ ஆர்ப்பாட்டம்:
இலங்கையில் முள்வேலி முகாம்களில் அவதிப்படும் தமிழர்களை உடனடியாகத் தங்கள் சொந்தக் குடியிருப்புகளில் குடியமர்த்த இலங்கை அரசை நிர்பந்திக்க மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் இன்று தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
சென்னையில் மெமோரியல் ஹால் எதிரில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு பங்கேற்றார்.
-
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications