காஷ்மீர் மக்களுக்கு சீனா தனி விசா-இந்தியா கடும் எதிர்ப்பு
டெல்லி: காஷ்மீர் மக்களுக்கு சீனா தனி விசா வழங்கி வருவதற்கு இந்தியா கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.
சீனாவுக்குச் செல்லும் இந்தியர்களுக்கு டெல்லியில் உள்ள சீனத் தூதரகம் தான் விசா வழங்கி வருகிறது. ஆனால் சமீப காலமாக சீனா செல்லும் காஷ்மீர் மாநிலத்தவருக்கு மட்டும் சீனத் தூதரகம் தனி விசா வழங்கி வருவது தெரியவந்துள்ளது.
இந்த விசா வழக்கம்போல் அல்லாமல் தனி தாளில் வழங்கப்பட்டு வருகிறது.
இதன்மூலம் காஷ்மீர் இந்தியாவின் பகுதி அல்ல, காஷ்மீர் மக்கள் இந்தியர்கள் அல்ல என்பதை மறைமுகமாகச் சொல்லும் வகையில் சீனா செயல்பட்டு வருகிறது.
மேலும் அருணாசலப் பிரதேசத்திலிருந்து சீனா செல்லும் இந்தியர்களுக்கும் இதேபோன்று தனி பேப்பரில் விசா வழங்கி வருகிறது சீன. அருணாசலப் பிரதேசம் தனது நாட்டின் ஒரு பகுதி என்று சீனா உரிமை கோரி வருவது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு காஷ்மீர், அருணாச்சல் மாநிலத்தவருக்கு தனி விசா வழங்குவதற்கு இந்தியா கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.
இன ரீதியாகவோ, பிராந்திய ரீதியாகேவா இந்தியப் பிரஜைகளுக்கிடையே பாகுபாட்டை சீனா ஏற்படுத்த முயல்வதாக சீனாவிடம் இந்தியா கூறியுள்ளது.
இதுகுறித்து டெல்லி சீனத் தூதரகத்தில் வெளியுறவு அமைச்சககம் தனது புகாரை பதிவு செய்துள்ளது.
இந்திய எல்லைப் பகுதியில் சீனா சமீப காலமாக ஊடுருவலை அதிகரித்துள்ளதோடு இந்தியப் பகுதிகளை கொஞ்சம் கொஞ்சமாக ஆக்கிரமித்து வருவதாக செய்திகள் வந்தவண்ணம் உள்ள நிலையில் இந்த விசா சேட்டையில் சீனா ஈடுபட்டுள்ளது.
-
பாலைவனத்தில் பங்கர்கள்.. அணு ஆயுதங்களை டபுளாக்கும் சீனா! சாட்டிலைட் படங்களால் வெளிவந்த உண்மை! -
பாலைவனத்தில் பதுங்கும் சீன டிராகன்... பதறும் அமெரிக்கா.. வெறும் 90 நொடிகளில் எல்லாமே முடிஞ்சுடும் -
சீனாவில் ஆடு மேய்க்கும் வேலைக்கு மாதம் 1 லட்சம் சம்பளம்! பண்ணையில் திரளும் பட்டதாரிகள்! பின்னணி என்ன -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications