வெள்ளப் பெருக்கு-குற்றாலத்தில் குளிக்க தடை

குற்றாலம், தென்காசி, செங்கோட்டை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. நேற்றுமுன்தினம் குற்றாலம் பகுதியில் கனமழை பெய்தது.
இதன் காரணமாக அருவிகளில் வெள்ளபெருக்கு ஏற்பட்டது. மெயின் அருவியில் தண்ணீர் ஆர்ச்சை தாண்டி கொட்டியது. இதனால் அருவியின் மத்திய பகுதிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டது. அருவியின் ஓரமாக நின்று குளிக்க அனுமதி்க்கப்பட்டனர். இதற்காக அருவியின் குறுக்கே கயிறு மூலம் தடை ஏற்படுத்தப்பட்டிருந்தது.
செண்பகாதேவி அருவி, தேனருவி செல்லும் பாதை வெள்ள நீரில் மூழ்கிவிட்டதால் அங்கு செல்ல தடை விதிக்கப்பட்டது. ஐந்தருவியின் ஐந்து கிளைகளிலும் தண்ணீர் வெள்ளமாக கொட்டியது. கற்கள் விழுவதாலும், தண்ணீர் தெளிவாக இல்லாததாலும் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.
வெள்ளத்தின் காரணமாக ஐந்தருவியில் ஆண்கள் குளிக்கும் பகுதியில் தடுப்பு இரும்பு கம்பி உடைந்து அந்தரத்தில் தொங்கியது.
தென்காசி, செங்கோட்டை, குற்றாலம் அதன் சுற்று வட்டார பகுதிகளில் மாலையிலும் மழை பெய்ததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications