அணை: கேரளாவுக்கு மத்திய அரசு அனுமதி தரவில்லை-தமிழகம்
சென்னை: முல்லை பெரியாறு அணை அருகே புதிய அணை கட்டுவது தொடர்பாக ஆய்வு நடத்த கேரளாவுக்கு மத்திய அரசு
இன்று வரை எந்தவிதமான அதிகாரபூர்வமான ஆணையும் பிறப்பிக்கவில்லை என்று தமிழக அரசு கூறியுள்ளது.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,
முல்லை பெரியாறு பிரச்சினையில் புதிய அணை கட்ட மத்திய அரசு கேரள அரசுக்கு ஆய்வு செய்ய அனுமதி கொடுத்து விட்டதாக ஒரு செய்தியும், இதை மறுத்து மற்றொரு செய்தியும் மாறி மாறி ஏடுகளில் வெளிவந்த நிலையில் இதுபற்றி ஒவ்வொருவரும் தங்கள் விருப்பத்திற்கேற்ப அறிக்கைகளை விட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
தமிழக அரசைப் பொறுத்த வரையில் கேரள அரசு புதிய அணை கட்டுவதற்கு நாம் நம்முடைய எதிர்ப்பை மத்திய அரசிற்கும் தெரிவித்திருக்கிறோம். நீதிமன்றத்திலும் வழக்கு நிலுவையிலே உள்ளது.
இன்று வரையில் மத்திய அரசின் சார்பாக எந்தவிதமான அதிகாரபூர்வமான ஆணையும் பிறப்பிக்கப்படவில்லை.
இவ்வாறு மத்திய அரசிடமிருந்து எந்தவிதமான அதிகாரபூர்வ தகவலும் இல்லாத நிலையில் சிலர் கூறுவதை போல உச்ச நீதிமன்றத்தில் தடை ஆணை பெற எந்தவிதத்திலும் இயலாது.
மத்திய அரசின் சார்பில் அதிகாரப்பூர்வமான உத்தரவு கேரள அரசுக்கு ஆதரவாக பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று யாராவது எடுத்துக் காட்டினால், தமிழக அரசு உடனடி நடவடிக்கை மேற்கொள்ளும் என்று கூறப்பட்டுள்ளது.
-
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
Chennai Metro: சென்னை பூந்தமல்லி- வடபழனி மெட்ரோ ரயில் சேவை எப்போது தொடங்கும்? எங்கெங்கு நிற்கும்? -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
4 ஆயிரம் உதவி பேராசிரியர் பணியிடங்கள்! 6 மாதத்திற்குள் தேர்வு நடத்த வேண்டும்.. சென்னை ஐகோர்ட் அதிரடி -
திருச்செந்தூர் முருகன் கோயிலில் அர்ச்சகருக்கு தடை மட்டும் விதிக்கப்பட்டது ஏன்? அமைச்சர் விளக்கம்!












Click it and Unblock the Notifications