இடறி விழுந்து தங்கபாலு காயம்
சென்னை: காந்தி ஜெயந்தியையொட்டி சென்னை கடற்கரை சாலையில் உள்ள காந்தி சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்திய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் தங்கபாலு கால் இடறி கீழே விழுந்து காயமடைந்தார்.
இன்று காந்தி ஜெயந்தியையொட்டி சென்னை கடற்கரை சாலையில் உள்ள காந்தி சிலைக்கு அனைத்துக் கட்சித் தலைவர்களும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் தங்கபாலு தலைமையில் சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் சுதர்சனம், துணைத் தலைவர் யசோதா, கொறடா பீட்டர் அல்போன்ஸ் உள்ளிட்ட காங்கிரஸ் பிரமுகர்கள் சிலை முன் வைக்கப்பட்டிருந்த மகாத்மா காந்தியின் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
இதையடுத்து காருக்குத் திரும்பிய தங்கபாலு கால் இடறி கீழே விழுந்ததில் வலது காலில் சுளுக்கு ஏற்பட்டது. வலியால் நடக்க சிரமப்பட்ட அவரை தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
ஆளுநர்-முதல்வர் அஞ்சலி:
அதே போல மெரீனா கடற்கரையில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா, முதல்வர் கருணாநிதி, துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
கண்காட்சி:
காந்தியடிகளின் 141வது பிறந்தநாள் விழாவினையொட்டி சென்னை கிண்டியில் அமைந்துள்ள காந்தி மண்டபத்தில் கண்காட்சியினை தமிழக செய்தித்துறை அமைச்சர் பரிதி இளம்வழுதி திறந்து வைத்தார்.












Click it and Unblock the Notifications