ஆட்டோ மீது கால் சென்டர் தகவல் தொடர்பு கோபுரம் விழுந்து பெண் பலி
Subscribe to Oneindia Tamil
நொய்டா: உ.பி. மாநிலம் நொய்டாவில், கால் சென்டர் தகவல் தொடர்பு கோபுரம் சாலையில் சென்று கொண்டிருந்த ஆட்டோ மீது விழுந்ததில், அதில் பயணம் செய்த குடிசைவாசிப் பெண் ஒருவர் உயிரிழந்தார். இன்னொரு சிறுமி காயமடைந்தார்.
அந்த கோபுரம் 60 அடி உயரம் கொண்டதாகும். ஒரு கால் சென்டரின் மேல் மாடியில் இது பொருத்தப்பட்டிருந்தது. நேற்று இந்த கோபுரம் திடீரென அப்படியே விழுந்தது. இதனால் சாலையில் சென்று கொண்டிருந்த ஆட்டோ ஒன்று சிக்கிக் கொண்டது.
அதில் பயணம் செய்த 8 வயது சிறுமி பலியானார். இன்னொரு சிறுமி காயமடைந்தார். அந்த சிறுமியின் பெயர் காஜல் என்று தெரிய வந்துள்ளது. காயமடைந்த சிறுமியின் பெயர் சந்தூ.
இருவரும் அருகில் உள்ள குடிசைப் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்று தெரிய வந்துள்ளது.












Click it and Unblock the Notifications