காந்தி ஜெயந்தியன்று மது விற்பனை- 4 பேர் கைது
குற்றாலம்: காந்தி ஜெயந்தியன்று மது விற்ற காரணத்துக்காக நெல்லை மாவட்டத்தில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குற்றாலம் அருகே ஒரு விடுதியில் மது விற்பனை நடந்து வருவதாக தென்காசி மதுவிலக்கு டிஎஸ்பி ஜெயக்குமாருக்கு தகவல் வந்தது.
இதையடுத்து அவரது உத்தரவின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் முகமது ஹனிபா, ஏட்டுகள் பேச்சி்முத்து, செந்தில், கு்மார், மூர்த்தி, முருகானந்தம் ஆகியோர் குற்றாலம், செங்கோட்டை சாலையில் உள்ள அந்த விடுதியில் அதிரடி சோதனை போட்டனர்.
அப்போது விடுதியின் வரவேற்பு அறையில் வைத்து விதிமுறைக்கு புறம்பாக மது விற்பனை செய்தது தெரிய வந்தது. அதையடுத்து விடுதியின் காசாளர் மயிலப்பபுரத்தை சேர்ந்த நேருராஜா, விற்பனையாளர்கள் இலஞ்சி இசக்கிமுத்து, நயினாகரம் குலசேகரவேல் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மேலும் விடுதி உரிமையாளர் அருணாசலத்தை போலீசார் தேடி வருகின்றனர்.
சுரண்டையில் ஒருவர் கைது...
சுரண்டை மேலபட்டார்க்குறிச்சி கிருஷ்ணன் கோவில் தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணன். மெயின் பஜாரில் பெட்டிக் கடை வைத்துள்ளார். இவர் கடையில் மது விற்பதாக சாம்பவர் வடகரை போலீசுக்கு தகவல் கிடைத்தது.
தென்காசி டிஎஸ்பி சீனிவாசன் உத்தரவின்பேரில், இன்ஸ்பெக்டர் நாகராஜன் மற்றும் போலீசார் கிருஷ்ணனின் கடையை சோதனை போட்டனர். அங்கு விற்பனைக்கு மறைத்து வைத்திருந்த 167 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். பின்னர் கிருஷ்ணனை கைது செய்து செங்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications