இளையான்குடி இடைத்தேர்தல்: திமுக வெற்றியை எதிர்த்து வழக்கு!
சென்னை: இளையான்குடி இடைத்தேர்தலில திமுக வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்க வேண்டும் என்று கோரி மக்கள் மாநாடு கட்சி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.
கடந்த ஆகஸ்ட் மாதம் தமிழகக்தில் காலியாக இருந்த 5 சட்டசபை தொகுதிக்களுக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. இதில் ஐந்திலும் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றது.
இளையான்குடி தொகுதியில் திமுக வேட்பாளர் மதியரசன் உட்பட 9 பேர் போட்டியிட்டனர். இவர்களை தவிர்த்து மக்கள் மாநாடு கட்சி வேட்பாளர் கலைமணி என்பவரும் வேட்புமனு தாக்கல் செய்தனர். ஆனால், அவரது வேட்புமனுவை சரிபார்த்த தேர்தல் பார்வையாளர்கள் முன்மொழிபவர்கள் பெயருக்கான வரிசை எண்ணில் முரண்பாடு இருப்பதாக கூறி நிராகரிக்கப்பட்டது.
அக்கட்சியினர் உடனடியாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தலுக்கு முன்னதாக வழக்கு தொடுத்தனர். அதை விசாரித்த நீதிபதி வேட்புமனுவை ரத்து செய்தது செல்லாது என தீர்ப்பு வழங்கினார்.
இதை எதிர்த்து தேர்தல் ஆணையம், சென்னை உயர் நீதிமன்ற மதுரை பெஞ்சில் வழக்கு தொடுத்தது. இதை விசாரித்த பெஞ்ச் வேட்புமனுவை நிராகரித்தது சரி என்றும், மக்கள் மாநாடு கட்சி மேல்முறையிடு செய்ய வேண்டும் என்றால் தேர்தலுக்கு பின்னர் செய்யுமாறும் கூறி தீர்ப்பு வழங்கியது.
தற்போது இது தொடர்பாக வழக்கு தொடர்ந்துள்ள மக்கள் மாநாடு கட்சியின் கலைமணி, இளையான்குடியில் திமுக வென்றது செல்லாது என அறிவிக்க வேண்டும் என்று மனுவில் கூறியுள்ளார்.
அதில்,
சிறிய தவறுகளை கவனத்தில் கொள்ள வேண்டாம் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. எனவே, வரிசை எண் முரண்பாடு இருப்பதாக கூறி எனது மனுவை நிராகரித்தது தவறு.
பர்கூர், ஸ்ரீவைகுண்டம் தொகுதிகளில் இடைத்தேர்தலில் மறுபரிசீலனை செய்து நிராகரிக்கப்பட்ட வேட்புமனு ஏற்கப்பட்டது.
ஆனால், எனது வேட்புமனுவை மறுபரிசீலனை செய்யவில்லை. அதை நிராகரித்தது செல்லாது என்று அறிவிக்க வேண்டும். திமுக வேட்பாளர் மதியரசன் வெற்றி பெற்றதை ரத்து செய்ய வேண்டும் என்றார்.
--












Click it and Unblock the Notifications