2 பயணிகள் விமானங்களை குத்தகைக்கு விடும் ஜெட் ஏர்வேஸ்
Subscribe to Oneindia Tamil
மும்பை: இரண்டு விமானங்களை குத்தகைக்கு விடுவது குறித்து ஓமன் ஏர் மற்றும் எதிஹாட் ஆகிய நிறுவனங்களுடன் பேசி வருகிறதாம் ஜெட் ஏர்வேஸ் நிறுவனம்.
இதுகுறித்து ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் கூறுகையில், எங்களது போயிங் 777 ரக விமானங்கள் இரண்டை குத்தகைக்கு விடுவது குறித்து ஓமன் ஏர் மற்றும் எதிஹாத்துடன் பேசி வருகிறோம்.
பேச்சுவார்த்தை நல்ல முன்னேற்றத்தில் உள்ளது. விரைவில் இதுதொடர்பாக முடிவு எடுக்கப்படும். இரு விமானங்களையும் குறைந்தது 6 மாதங்களுக்கு குத்தகைக்கு விடத் திட்டமிட்டுள்ளோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications