விடுப்பில் போன சென்னை கமிஷனர் - ராதாகிருஷ்ணனுக்கு கூடுதல் பொறுப்பு
சென்னை: சென்னை மாநக காவல்துறை ஆணையர் ராஜேந்திரன் திடீர் விடுப்பில் சென்றுள்ளார். இதையடுத்து அவருக்கு முன்பு ஆணையராக இருந்த கூடுதல் டிஜிபி ராதாகிருஷ்ணன் வசம் கமிஷனர் பொறுப்பு கூடுலதாக ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மாநகர காவல்துறை ஆணையர் ராஜேந்திரன் நீண்ட விடுமுறையில் செல்கிறார். இதையடுத்து மாநகர ஆணையர் பொறுப்பு கூடுதலாக கூடுதல் டிஜிபி ராதாகிருஷ்ணனிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
ராதாகிருஷ்ணன் ஆணையராக இருந்தபோதுதான் கடந்த பிப்ரவரி மாதம் 19ம் தேதி சென்னை உயர்நீதிமன்ற வளாகத்திற்குள் வக்கீல்களுக்கும், போலீஸாருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டு நாட்டையே பரபரப்பில் ஆழ்த்தியது.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து ஆணையராக இருந்த ராதாகிருஷ்ணன், கூடுதல் ஆணையராக இருந்த விஸ்வநாதன், இணை ஆணையராக இருந்த ராமசுப்ரமணி ஆகியோர் இடமாற்றம் செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தற்போது கூடுதல் பொறுப்பு ராதாகிருஷ்ணன் வசம் கொடுக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications