சென்னையில் தனியாக இருந்த வயதான பெண் படுகொலை
சென்னை: சென்னை வேளச்சேரியில், வீ்ட்டில் தனியாக இருந்த 60 வயதுப் பெண் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
சென்னையில் படுகொலைகள் ஏதோ அல்வா சாப்பிடுவது போல படு சகஜமாகி விட்டன. அடுத்தடுத்து நடந்து வரும் கொலைச் சம்பவங்களால் சென்னை மக்கள் பெரும் பீதியில் உள்ளனர்.
இவற்றில் பெரும்பாலானவை ஆதாயத்திற்காக நடப்பவையாக உள்ளன. சமீபத்தில் அனந்தலட்சுமி என்ற பெண்ணும், அவரது மகனும் படுகொலை செய்யப்பட்டனர். இந்த வழக்கில் போலீஸார் துரிதமாக செயல்பட்டு குற்றவாளியை நெருங்கவே அவன் கோர்ட்டில் சரணடைந்து விட்டான்.
இந்த நிலையில் வேளச்சேரியில் ஒரு படுகொலை நடந்துள்ளது. பட்டப் பகலி்ல் இந்தக் கொலை நடந்துள்ளது.
நேரு நகர் பாரதியார் தெருவில் வசித்து வந்தவர் மனோன்மணி. 60 வயதான இவரது கணவர் நாகராஜ். இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். மனோன்மணியுடன், மகன், மருமகளும் சேர்ந்து வசித்து வருகின்றனர்.
நேற்று இருவரும் ரேஷன் கடைக்குப் போயிருந்தனர். வீட்டில் மனோன்மணி மட்டும் தனியாக இருந்தார். அவரது மகனும், மருமகளும் வீடு திரும்பியபோது மனோன்மணி ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்ததைப் பார்த்து திடுக்கிட்டு அலறினர்.
மனோன்மணியின் தலையை சுவற்றில் மோதி கொடூரமாகக் கொன்றுள்ளனர். அவரது கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலியைக் காணவில்லை என்பதும் தெரிந்தது.
இதுகுறித்து வேளச்சேரி போலீஸாருக்குத் தகவல் போனது. அவர்கள் மோப்ப நாய் சகிதம் விரைந்து வந்து விசாரணையில் இறங்கியுள்ளனர்.
-
சென்னை மடிப்பாக்கத்தில் பயங்கர தீ விபத்து.. பகலும் இரவானது.. கரும்புகையால் திணறிய மக்கள் - வீடியோ! -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்! -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
CBSE உள்பட தனியார் பள்ளிகளில் கல்வி கட்டணத்தை கேட்டிலேயே எழுதி வைக்க வேண்டும்.. தமிழகத்தில் உத்தரவு












Click it and Unblock the Notifications