மன்மோகனுக்கு நவ. 24ல் வெள்ளை மாளிகையில் விருந்து

Subscribe to Oneindia Tamil

Manmohan singh with Obama
வாஷிங்டன்: பிரதமர் மன்மோகன் சிங் அடுத்த மாதம் 24ம் தேதி வெள்ளை மாளிகையில் அதிபர் ஒபாமா கொடுக்கும் விருந்தில் கலந்து கொள்கிறார் என அமெரிக்க அரசு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

அமெரிக்க அரசு ஆண்டுதோறும் குளிர் காலத்தில் வெளிநாட்டை சேர்ந்த தலைவர்களுக்கு விருந்து கொடுப்பது வழக்கம். இந்த ஆண்டு ஜனவரி 20ம் தேதி பதவியேற்ற ஒபாமா அரசின் முதல் விருந்துக்கு பிரதமர் மன்மோகன் சிங் அழைக்கப்பட்டுள்ளார்.

இருநாடுகளையும் சேர்ந்த சுமார் 40 முக்கிய தம்பதியினர் பங்கேற்கும் இந்த விருந்தை மிஷல் ஒபாமா அளிக்கிறார். இதற்காக அவர் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை செய்து வருவதாக கூறப்படுகிறது.

இது குறித்து வெள்ளை மாளிகை செய்திகுறிப்பு ஒன்று கூறுகையில்,

இந்திய பிரதமர் மன்மோகன் சிங் வரும் நவம்பர் 24ம் தேதி வாஷிங்டன் வருகிறார். ஒபாமா அரசு பதவியேற்ற பின்னர் முதன் முறையாக இந்திய பிரதமர் அதிகாரப்பூர்வ சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

சுற்றுப்பயணத்தின் போது சில முக்கிய முடிவுகள் எடுக்கப்படும். இது இந்தியா, அமெரிக்கா இடையே நெருக்கமான உறவை வளர்க்க உதவும். இரு நாட்டு தலைவர்களுகம் உலக பிரச்சனைகள் மற்றும் இரு நாட்டு உறவுகள் ஆகியவற்றை பகிர்ந்து கொள்வார்கள்.

அப்போது அவர்கள் கடந்த ஜூலை மாதம் துவங்கிய போர் ஆயுதங்கள் குறித்து பேச்சுவார்த்தையை தொடர இருக்கின்றனர். ஒபாமா வரும் நவ. 24ம் தேதி பிரதமர் மற்றும் அவரது மனைவி ஆகியோருக்கு அரசு ரீதியான விருந்து அளிக்க இருக்கிறார்.

அமெரிக்க அரசு, பிரதமர் மன்மோகனுக்கு அளிக்கவிருக்கும் இந்த விரு்து மிகவும் விமர்சிகையாக இருக்கும். இது நன்னம்பிக்கையின் அடையாளமாக அளிக்கப்படுகிறது. இது இரு நாட்டுக்கு இடையே நட்புறவை வளர்க்க மிகவும் உதவும் என அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

சீனாவின் அத்துமீறல் மற்றும் அச்சுறுத்தல் அதிகரித்து வரும் சூழ்நிலையில் ஒபாமா அரசின் முதல் விருந்தினராக பிரதமர் மன்மோகன் சிங் செல்வது சர்வதேச அளவில் அதிக முக்கியவத்தும் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+