எம்பிபிஎஸ் சீட் வாங்கித் தருவதாக கூறி ரூ. 21 லட்சம் மோசடி
கருங்கல்: கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே எம்பிபிஎஸ் சீட் வாங்கி தருவதாக கூறி ரூ. 21 லட்சம் மோசடி செய்ததோடு, பணத்தைத் திருப்பிக் கேட்டபோது, மிரட்டியதாக 8 பேர் மீது புகார் கூறப்பட்டுள்ளது.
கருங்கல் அருகேயுள்ள உதயமார்த்தாண்டம் பகுதியை சேர்ந்தவர் தேவதாசன். இவர் தனது மகனை டாக்டருக்கு படிக்க வைக்க ஆசைப்பட்டார். அதன்படி தனியார் கல்லூரிகளில் எம்பிபிஎஸ் சீட்டுக்காக அலைந்தார்.
அப்போது மார்த்தாண்டம் அருகே உள்ள இடைக்கோடு பகுதியை சேர்ந்த ஞானதாஸ், கிறிஸ்டோபர், கிரிஸ்டல் ஜாய், தனசிங்தாஸ், கேரளாவை சேர்ந்த மனோகரன் ஆகியோர் அறிமுகமாயினர். அவர்கள் கேரளாவில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரியில் எம்பிபிஎஸ் சீட் வாங்கி தருவதாக கூறினார்.
அதற்கு ரூ.21 லட்சம் பணம் வேண்டும் என பேசி முடித்துள்ளனர். அதன்படி 21 லட்ச ரூபாயை 2 தவணையாக தேவதாசன் கொடுத்துள்ளார். பணத்தை வாங்கி கொண்ட அவர்கள் கூறியது போல எம்பிபிஎஸ் சீட் வாங்கி தரவில்லை.
இதையடுத்து தேவதாசன் பணம் கொடுத்தவர்களிடம் கேட்டார். அதற்கு அவர்கள் சரியாக பதில் கூறவில்லை. இதனால் தேவதாசன் தனது பணத்தை திருப்பி கேட்டார். அதற்கு அவர்கள் பணத்தை திருப்பி தர மறுத்துவிட்டனர். மேலும் அந்த எட்டு பேரும் தேவதாசை மிரட்டியுள்ளனர்.
இதைத் தொடர்ந்து தேவசாதன் எம்பிபிஎஸ் சீட் வாங்கி தருவதாக கூறி பண மோசடி செய்ததாகவும், பணத்தை திருப்பி கேட்ட என்னை கொலை செய்து விடுவதாக மிரட்டியதாகவும் கருங்கல் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர்.
போலீஸார் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். போலீஸார் தேடுவதை அறிந்ததும் எட்டு பேரும் தலைமறைவாகி விட்டனர்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications