வாக்காளர்களை ஈர்க்க வாஜ்பாயை விட்டு கோரிக்கை விடும் பாஜக
டெல்லி: உட்கட்சி்ப் பூசலால் துவண்டு போயிருக்கும் கட்சியை தூக்கி நிறுத்தும் வகையிலும், மூன்று மாநில சட்டசபைத் தேர்தலில் பாஜகவுக்கு வாக்களிக்குமாறு வாக்காளர்களுக்கு கோரிக்கை விடும் வகையிலும், முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மூலமாக கோரிக்கை ஒன்றை விடுக்கவுள்ளது பாஜக.
வாஜ்பாய் என்றைக்கு தீவிர அரசியலிலிருந்து விலகினாரோ அன்று முதலே பாஜகவுக்கு தேய் பிறையாகி விட்டது. லோக்சபா தேர்தலில் பெரும் தோல்வியைச் சந்தித்தது ஒரு பக்கம் என்றால், உட்கட்சிப் பூசல் மறுபக்கம் மண்டையைப் பிளந்து கொண்டிருக்கிறது.
இந்த நிலையில், முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மூலம் மகாராஷ்டிரா, ஹரியானா, அருணாச்சல் பிரதேச வாக்காளர்களுக்கு பாஜகவுக்கு வாக்களிக்குமாறு கோரிக்கை வைக்கவுள்ளது பாஜக. இன்று வாஜ்பாயியின் கோரிக்கை வெளியாகும் என்று தெரிகிறது.
இதுகுறித்து பாஜக தேர்தல் பொறுப்பாளர் முக்தார் அப்பாஸ் நக்வி கூறுகையில், மகாராஷ்டிரா, ஹரியானா, அருணாச்சல் பிரதேச வாக்காளர்களுக்கு பாஜக சார்பில் நாளை (இன்று) கோரிக்கை விடுப்பார் வாஜ்பாய். இதுதொடர்பாக நானும், செய்தித் தொடர்பாளர் பிரகாஷ் ஜாவேத்கரும் வாஜ்பாயை சந்தித்துப் பேசுகிறோம்.
எந்த வகையில் வாஜ்பாயியின் கோரிக்கை இருக்கும் என்பது குறித்து எங்களுக்குத் தெரியாது. இருப்பினும் வாஜ்பாய் கடிதம் மூலமாக கோரிக்கை விடுக்கக் கூடும் என எதிர்பார்க்கிறோம் என்றார்.
-
அந்த 2 லேடீஸ்..1 மாஜி தலை! பாஜக மண்ணைக் கவ்வ ‘இவர்கள்’ தான் காரணம்! அமித் ஷாவிடம் அடுக்கிய அண்ணாமலை! -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்!












Click it and Unblock the Notifications